ராஜ்கிரண் ஹீரோ ஆனது யாரால் தெரியுமா?!.. இப்படி ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கா?…
இளையராஜா வெறும் இசையமைப்பாளர் மட்டும்மல்ல. நல்ல கதை அறிவு உள்ளவர். படத்தின் எந்த காட்சியில் என்ன மாதிரியான பாடல் வரவேண்டும் என்பது இயக்குனர்களை விட அவருக்கு அதிகம் தெரியும். வேற பாடலுக்கு காட்சிகள் எடுக்கப்பட்டு அதில் திருப்தி இல்லமால் போனால் எடுத்த காட்சிகளுக்கு ஏற்றதுபோல் பாடலை அமைத்து கொடுப்பார் இளையராஜா. இதை பல படங்களில் செய்துள்ளார். அதனால்தான் எப்போதும் இசைஞானியாக இருக்கிறார்.
அதுமட்டும்மல்ல ஒரு படத்தின் கதையை கேட்டால் இது ஓடும், ஓடாது என சொல்லி விடுவார். அதேபோல், மொக்கை கதை மற்றும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையை கொண்ட பல மொக்கை படங்களை தனது இசையால் ஓட வைத்துள்ளார். அதேபோல், சில புதிய ஹீரோக்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் ராஜ்கிரண் 40 வருடங்களுக்கு முன்பு வினியோகஸ்தராக இருந்தவர். சைக்கிளில் சினிமா பொட்டியை வைத்துக்கொண்டு தியேட்டர் தியேட்டராக போவார். அவரின் நிஜ பெயர் மொய்தின் அப்துல் காதர். திரையுலகில் அவரை எல்லோரும் மொய்தீன் பாய் என சுருக்கமாக அழைப்பார்கள். நிறைய படங்கள் வினியோகம் செய்து கொஞ்சம் பணம் சேர்த்து ராஜ்கிரண் தயாரிப்பளராக மாறினார். ராமராஜனை வைத்து சில படங்களையும் தயாரித்துள்ளார்.
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்க ஒரு புதிய படத்தை ராஜ்கிரண் தயாரிக்க முடிவு செய்தார். ஆனால், அந்த படத்தில் ராமராஜன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் நடிக்கவில்லை. வேறு சில நடிகர்களையும் நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், அந்த கதையில் நடிக்க யாரும் முன்வரவில்லை. எனவே, யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என ராஜ்கிரணும், கஸ்தூரி ராஜா யோசித்துக்கொண்டிருந்த போது ‘பாயை ஹீரோவாக போட்டு படம் எடுங்கள்’ என ராஜ்கிரணை சொன்னவர் இளையராஜா. அதோடு, அந்த படத்திற்கு மனதை வருடும் பாடல்களை போட்டு கொடுத்தார்.
இந்த படம் மூலம் நடிகரான ராஜ்கிரண் அதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அத்தனை படங்களுக்கும் ராஜாவே இசையமைத்தார். தன்னை ஹீரோவாக மாற்றியது இளையராஜா என்பதால் அவர் மீது எப்போதும் மதிப்பும், மரியாதையும், விஸ்வாசமும் கொண்டவராக ராஜ்கிரண் எப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நயன்தாரா இப்படி நடந்துக்கிட்டது ஒன்னும் புதுசு இல்ல… ஜீவா பட ஷூட்டிங்கில் நடந்த களேபரம்!!