Cinema News
எவனையும் தேடி நான் போகல!.. எல்லாரும் என்னை தேடி வந்தாங்க!.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா!…
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. கிராமத்திய இசையை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியவர். ராஜாவின் ரம்மியமான பாடல்கள் இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் திரைப்படங்களும் ஹிட் அடிக்க ஒரு கட்டத்தில் படங்களின் வெற்றிக்கே இளையராஜா தேவைப்பட்டார்.
அதன்பின் இளையராஜாவை நம்பியே திரைப்படங்கள் உருவாகியது. இளையராஜா இசை என்றால்தான் படங்களே விற்பனை ஆனது. ரஜினி, கமல் என பெரிய நடிகர்களும் இளையராஜாவின் இசையை நம்பி காத்திருந்தனர். 80களில் இருந்து 90வரை 20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவை தனது இசையால் கட்டி ஆண்டார் இளையராஜா.
ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட இசை இயக்குனர்கள் வந்த பின் இளையராஜாவை மட்டும் நம்பிக்கொண்டிருந்த இயக்குனர்கள் அவர்கள் பக்கம் சென்றனர். இதனால், ராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. ஒருபக்கம், சமீபகாலமாக இளையராஜா பேசும் விஷயங்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இளையராஜா ‘1968ம் வருடம் ஹார்னோனியத்தை தூக்கிக்கொண்டு சென்னை வந்தேன். யாரையும் தேடி நான் செல்லவில்லை. ரஜினி, கமல் கூட என்னை தேடி வந்தார்கள். ஹார்மோனியம் ஒன்றுதான் என்னுடைய நெருக்கமான நண்பன். வேறு யாரும் கிடையாது’ என இளையராஜா பேசியிருந்தார்.
இதை கையிலெடுத்த நெட்டிசன்கள் ‘சினிமா என்பது கூட்டு முயற்சிதான். தலைக்கணத்தில் இப்படி இளையராஜா பேசக்கூடாது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இல்லாமல் இளையராஜா இல்லை’ என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிஸ்ஸிங் சீனில் கமலிடம் வசமாக சிக்கிக் கொண்ட மீனா! இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்..