எனக்கு நம்பிக்கை இல்ல.. நீ கல்யாண மண்டபத்துல வாசிச்சி காட்டு!.. இளையராஜவை சோதித்த தயாரிப்பாளர்!...
இசையின் மீது இருந்த ஆர்வத்தில் சொந்த ஊரில் பாவலர் பிரதர்ஸ் என்கிற இசைக்குழுவை நடத்தியவர் இளையராஜா. அதில் ராஜா, அவரின் அண்ணன் பாஸ்கர், அவரின் தம்பி கங்கை அமரன் ஆகியோர் இருந்தனர். ஊரில் நாடகங்கள், சின்ன சின்ன நிகழ்ச்சிகள், அரசியல் மேடைகள் என பலருக்கும் இசையமைத்தனர்.
அதன்பின்னர் சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசையில் சகோதரர்களுடன் சென்னை வந்தார் இளையராஜா. பல சினிமா நிறுவனங்களிலும் ஏறி இறங்கினார். அப்போது முன்னணி இயக்குனர்களாக இருந்த எஸ்.பி.முத்துராமன் உட்பட பல இயக்குனர்களிடம் வாசித்து காட்டினார். ஆனால், யாரும் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை.
அப்போதுதான் அப்போது பல படங்களுக்கு கதை, திரைக்கதை அமைத்தவரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டார். இளையராஜாவிடம் இருக்கும் இசையை முதலில் கண்டு கொண்டவர்தான். அப்போது சிலருடன் இணைந்து அன்னக்கிளி படத்தை அவர் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்திற்கு ராஜாவை இசையமைக்க வைக்கலாம் என அவர் முடிவெடுத்தார்.
இதையும் படிங்க: நீ யார் என கேட்டார் இளையராஜா!.. சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பரணியின் தற்போதைய நிலை!..
ஆனால், அப்படத்தை அவருடன் இணைந்து தயாரித்த கே.எம்.சுப்பு என்பவருக்கு ராஜா மீது நம்பிக்கை வரவில்லை. ராஜா நன்றாக டியூன் போட்டாலும் முழு படத்திற்கும், பாடல்களுக்கும் அவர் நன்றாக இசையமைப்பாரா என்கிற சந்தேகம் அவருக்கு வந்துள்ளது. எனவே, ஒரு பாடலை அவர் தனது குழுவினரிடன் இசையமைத்து காட்ட வேண்டும். திருப்தி என்றால் இவரே இசையமைக்கட்டும் என தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது.
எனவே, இசைக்குழுவினர் எல்லோரையும் ஒரு திருமண மண்டபத்திற்கு வரவழைத்து ஒரு பாடலை வாசித்து காட்டினார் இளையராஜா. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது பிரபல பாடகியாக இருந்த எஸ்.ஜானகியும் அங்கு வந்து அந்த பாடலை பாடி காட்டியுள்ளார். அதற்கு முன் ஒரு இசையமைப்பாளரை சோதிப்பதற்காகவெல்லாம் யாரிடமும் சென்று அவர் பாடியது கிடையாது. ஆனால், ராஜாவுக்காக வந்து பாடலை பாடி காட்டினார். இளையராஜாவின் இசையில் ஈர்க்கப்பட்டு தயாரிப்பாளர் தரப்பு திருப்தி அடைந்தது. எனவே, அன்னக்கிளி படத்திற்கு இசையமைப்பாளராக அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்னக்கிளி படத்தில் ராஜா போட்ட அன்னக்கிளி உன்ன தேடுதே உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன்பின் பல படங்களுக்கும் இசையமைத்து அவர் முன்னணி இசையமைப்பாளராக மாறி பல பாடல்களை கொடுத்து பல வருடங்கள் திரையுலகை கட்டி ஆண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்லாம் வேஷம்! ஞானினு காட்ட இப்படியெல்லாம் பண்றாரு – இளையராஜாவை விமர்சிக்கும் பிரபலம்..