Connect with us
semparuthi

Cinema News

செம்பருத்தி படத்தின் 9 பாடல்கள்!.. டியூன் போட இளையராஜா எடுத்துகொண்ட நேரம் இதுதானாம்!…

Ilayaraja: இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமல்ல. மிகவும் வேகமாக ட்யூன் போடுவார். 80களில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா அதன்பின் தமிழ் சினிமாவையே தனது பாடல்களால் ஓடவைக்கும் முக்கிய காரணமாக மாறினார்.

இவரின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. ஹீரோவை புக் செய்வதற்கு முன் இளையராஜாவின் இசையைத்தான் முதலில் தயாரிப்பாளர்கள் உறுதி செய்வார்கள். ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், ராமராஜன் உள்ளிட்ட எல்லோருக்கும் பல அற்புதமான, இனிமையான பாடல்களை கொடுத்தார் இளையராஜா.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு அது தெரியாது!.. அதுதான் பிரச்சனை!.. ஓப்பனா பேசிட்டாரே பார்த்திபன்!..

சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில்தான் இளையராஜா தொடர்ந்து இசையமைத்து வந்தார். காலை 7 மணிக்கு வந்தால் மாலை 6 மணி வரை அங்குதான் இருப்பார். ஒரு நாளில் 4 படங்களுக்கு டியூன் போட்டுவிட்டு அதன்பின் சில படங்களுக்கு பின்னணி இசை அமைக்கும் வேலையையும் செய்துவிடுவார்.

இப்போதுள்ள முன்னணி இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு மொத்த பாடல்களையும் கொடுக்க பல மாதங்கள் எடுத்து கொள்கிறார்கள். ஒரு பாடலுக்கு 2 மாதம் எடுத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால், இளையராஜா சில மணி நேரங்களே எடுத்துக்கொள்வார்.

இதையும் படிங்க: நல்லா பாடி இருக்கே!.. எஸ்.பி.பியை இளையராஜா பராட்டியது இந்த ஒரு பாட்டுக்குத்தானாம்!..

அதிலும், பல திரைப்படங்களுக்கு மொத்த பாடல்களையும் போட ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டார். மதிய உணவு வர நேரமானதால் பி.வாசுவை அழைத்து அந்த இடைவெளியில் அவர் போட்ட பாடல்கள்தான் சின்ன தம்பி படத்தில் வந்தது. அத்தனை பாடல்களும் இனிமையாக இருக்கும். குணா படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களுக்கு டியூன் போட அவர் எடுத்துக்கொண்டாது 2 மணி நேரம்தான். இப்போதும் கூட குழந்தைகளால் பாடப்படும் பாடலாக ‘கண்மணி அன்போடு காதலன்’ இருக்கிறது. இந்த பாடலை வைத்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தையே ஒட்டி பல கோடிகள் சாம்பாதித்தார்கள்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ‘செம்பருத்தி படத்தில் மொத்தம் 9 பாடல்கள். நான் இதுதான் பாடலின் சூழ்நிலை என எல்லாம் சொல்லி இளையராஜா டியூன் போட்டது எல்லாம் சேர்த்து மொத்தம் 45 நிமிடங்களில் முடிந்துவிட்டது. அனைத்துமே அற்புதமான பாடல்கள்’ என சொல்லி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top