35 நிமிஷத்தில் 5 பாடல்களா?.. மின்னல் வேகத்தில் இசையமைத்த இளையராஜா.. என்ன படம் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து இசை மாமேதையாக வளர்ந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜா மூன்று தலைமுறைகளாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவரின் இசையில் அமைந்த பாடல்கள் மெருகூற்றிக் கொண்டிருக்கின்றன. நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என இசையை முறையாக கற்றறிந்தவர்.
இதையும் படிங்க : ஒரு பாட்டுக்காக இப்படி உயிரையே பணயம் வைக்குறதா?? கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து உடல் கருகி வெளிவந்த ஸ்ரீகாந்த்…
சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை 4 முறை வென்றவர். காலம் கடந்தும் இவரின் இசையில் அமைந்த பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் பெருமையை பிரபலங்கள் பலர் கூறினாலும் இயக்குனரான பி. வாசு அவரை பற்றி கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பி.வாசுவின் இயக்கத்தில் பிரபுவின் கெரியரில் முக்கிய படமாக அமைந்த சின்னத்தம்பி படத்திற்கு இசையமைத்தார் இளையராஜா. படமும் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸிலும் ஸ்கோர் அடித்தது. படம் மட்டுமில்லாமல்
படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் செம ஹிட்.
இன்றளவும் தன் குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க பிரபு பாடிய தூரியிலே பாடலை தான் தாய் மார்கள் விரும்பி
போட்டு தூங்க வைக்கின்றனர். இப்படி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்கும் பட்சத்தில் அவர் கேட்டதும் சரியாக 35 நிமிஷத்தில் அந்த 5 பாடல்களுக்கும் மெட்டுக்களை போட்டு விட்டாராம் இளையராஜா.
எப்படி இது சாத்தியம் என நமக்கு வேண்டுமென்றால் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் இளையராஜா எந்த அளவிற்கு தன் இசையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்த செய்தியை பி.வாசுவே ஒரு பேட்டியில் கூறினார்.