எம்.ஜி.ஆர் பாடலை சுட்டு கமலுக்கு போட்ட இசைஞானி.. அசந்துபோன உலகநாயகன்...
திரையுலகில் பொதுவாக ஒரு பழைய ஹிட் பாடல் அல்லது வேறுமொழியில் வந்த ஒரு ஹிட் பாடலை கொஞ்சம் டியூன் மாற்றி இசையமைப்பாளர்கள் பல படங்களில் பாடல்களை அமைத்திருப்பார்கள். இது அந்த இசையமைப்பாளர் கூறினால் மட்டுமே வெளியே தெரியும். சில சமயம் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்களும் அந்த பாடல் மாதிரியே ஒரு பாடல் வேண்டும் என இசையமைப்பாளர்களை கேட்பார்கள். எனவே, விருப்பம் இல்லாவிட்டாலும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.
பொதுவாக திரைப்பட பாடல்கள் ஒரு ராகத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்படும். எனவே, ஒரே ராகத்தில் உருவான பாடல்களின் தாளங்கள் ஒருமாதிரி இருக்கும். கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள்.
இப்படம் 1989ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் கமலுடன் நாகேஷ், டெல்லி கணேஷ், கவுதமி, ஜனகராஜ், மனோரமா என பலரும் நடித்திருந்தனர். இப்படம் கமலுக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த கமல் ஒரு கதாபாத்திரத்தில் குள்ளமாக நடித்திருப்பார். இப்போது வரை கமல் அதை எப்படி செய்தார் என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கிறது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் ஒரு காட்சிக்கு இளையராஜா பல ட்யூன்களை போட்டு காட்டியும் கமலுக்கு திருப்தி இல்லை.
உங்களுக்கு என்ன மாதிரியான பாட்டுதான் வேணும்? என கமலிடம் இளையராஜா கேட்க ‘அன்பே வா’ படத்தில் இடம் பெற்ற ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ பாடல் போல பாடல் வேண்டும் என சொல்ல, அதுபோலவே இளையராஜா போட்ட மெட்டுதான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடல். இப்பாடல் அப்பு கமல் பாடுவது போல் படத்தில் எடுக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் மெட்டில் எம்.ஜி.ஆரின் நான் பார்த்ததிலே பாடலை இளையராஜா பாடிக்காட்ட கமல் அசந்துபோய்விட்டாராம்.
இது போல பல ஹிட் பாடல்களின் தழுவலில் தான் பல பாடல்களை இசையமைத்துள்ளதாக இளையராஜவே பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்த தயாரிப்பாளர்!.. தேசிய விருதை கொடுக்காதது ஏன்?..அப்பவே போர்க்கொடி தூக்கிய பிரபலம்..