இந்திய சினிமாவை பொருத்தவரையில் இசை இல்லாமல் திரைப்படங்களை உருவாக்குவது சாத்தியம் இல்லை. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை இசை என்றால் ஒரு தனி மரியாதை தான். ஹார்மோனியத்தில் இருந்து தொடங்கி தற்ப்போது உள்ள நவீன கால டெக்னாலஜி வரை இசை பரிணாம வளர்ச்சியை அடைந்தாலும் இசை மக்களை மகிழ்விப்பதை தவறியது இல்லை. மொழிகள் பல இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களயும் இணைக்கும் உலக பொது மொழியாக இசை விளங்குகிறது. தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர்கள் வளர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தாலும் நம் இசை ஜாம்பவான்களை மிஞ்ச முடியாது.
என்னதான் இந்த கால கட்ட 2k பாடல்களை கேட்டாலும் 90s , 80s பாடல்களை நோக்கித்தான் மனம் அலைபாய்கிறது. நம்ம இளையராஜா , வாலி அவர்களின் பாடல்கள் , வார்த்தைகளாக இல்லாமல் அவை பேசும் வரிகளாக நம் மனதை குளிரவைக்கின்றன. ”இசை ஒரு பெருங்கடல் நான் செய்தது ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” இவ்வாறு இளையராஜா சொன்னது உண்டு. இளையராஜா இந்திய திரைப்பட இசையமைப்பாளர் . இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் . பல விருதுகளையும் பெற்றுள்ளார். இளையராஜா பாடல்கள் என்றால் ஒரு தனி பிரியம் தான். வாலி அவர்களின் பாடல்களை பற்றி சொல்லவே வேணாம். எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம் தொடங்கி ரஜினி – கமல், அஜித்-விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் வரை பல தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் பயணித்தவர் கவிஞர் வாலி.
இவரை வாலிப கவிஞர் என்றும் கூறுவர். வாலி தற்காலத்துக்கு ஏற்றார் போல் பாடல்களை எழுதியுள்ளார். அவைகளில் பல டிரெண்டிங்காக தவறியதே இல்லை. வாலி தன்னுடைய அறுபது வயதுக்கு மேல் எழுதிய பல காதல் பாடல்கள் இளம் கவிஞர்களின் கற்பனைக்கே எட்டாத கோணத்தில் யோசித்து எழுதியிருப்பார். அப்படி இளையராஜாவின் இசையிலும் வாலியின் வரிகளிலும் பல பாடல்கள் வந்துள்ளது. ஒரு திரைப்படத்திற்காக இவர்கள் இருவரும் இணைவது சாதாரண விஷயம் தான். அதை தாண்டி இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?
உண்மைதான் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவி வாலியின் அண்ணன் பேத்தியாம். ”இவர்கள் திருமணத்தில் ஜாதி பிரச்சனை வந்த போது அதை தீர்த்து வைத்து திருமணத்தை முன் நின்று நடத்துனது நான் தான்” என்று கூறியுள்ளார் வாலி. அதனால் நானும் இளையராஜாவும் சம்மந்திகள் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .
இது மட்டும் இல்லை இசையமைப்பாளர் தேவாவும் உறவினராம் , இளையராஜாவின் அண்ணனும் இசையமைப்பாளர் தேவாவும் சம்பந்திகளாம். இதன் மூலம் தேவாவும் இளையராஜாவின் உறவினராகிறார். ஆனால் தேவா இதுவரை இளையராஜாவின் உறவினர் என்று வெளியே கூறியதும் இல்லை. இசைத்துறையில் வாலி-இளையராஜா-தேவா மூவரும் உறவினர்கள் என்பது இதுவரை வெளியே தெரியாத ஆச்சரியத் தகவலாக உள்ளது.
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…