ரஜினி படத்தை இயக்கவிருந்த இளையராஜா!.. ஆனா நடக்காமே போச்சே!.. அட அந்த படமா?!…

Published on: August 11, 2024
ilayaraja
---Advertisement---

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக உருவெடுத்தவர் இளையராஜா. 80களில் இவரின் இசை ராஜ்யம்தான் திரையுலகில் நடந்தது. இளையராஜாவின் பாடல்களை நம்பியே அப்போது பல திரைப்படங்களும் உருவானது.

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் மட்டுமில்லாமல் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் அவரின் இசையைநம்பியே இருந்தார்கள். ஒரு படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை தேவைப்பட்ட காலம் அது. ஒரு நாளில் பல படங்களுக்கும் இசையமைத்தார் இளையராஜா.

பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் தான் யார் என நிரூபித்து காட்டினார் இளையராஜா. இயக்குனர்களால் வசனங்களிலும் காட்சிகளிலும் சொல்ல முடியாத உணர்வுகளை கூட இளையராஜாவின் இசை திரையில் சொன்னது. பல இனிமையான பாடல்களை கொடுத்தார் இளையராஜா.

பாடலுக்கு இசையமைப்பது மட்டுமல்ல பாடல்களை எழுதுவது, பாடுவது என பல அவதாரங்களை அவர் எடுத்தார். இளையராஜவிடம் நல்ல கதை அறிவும் உண்டு. பின்னணி இசைக்காக படங்களை பார்க்கும்போது சில மாறுதல்களை அவர் இயக்குனரிடமும் சொல்வார். அது கண்டிப்பாக படத்தின் வெற்றிக்கு உதவும்.

இசை அல்லாமல் பார்த்தால் சில படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார். பாவலர் கிரியேஷன்ஸ் என்கிற பெயரில் சில படங்கள் வெளிவந்திருக்கிறது. அதேநேரம், இளையராஜா ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. இதுபற்றி கவுதம் மேனனிடம் ஒரு நேர்காணலில் அவர் சொல்லி இருக்கிறார்.

ரஜினி நடித்த ராஜாதி ராஜா படத்தை நான் இயக்குவதாக இருந்தது. இதற்கு ரஜினியும் சம்மதம் சொன்னார். அந்த தலைப்பையே நான்தான் சொன்னேன். ஆனால், சில காரணங்களால் என்னால் அதை செய்ய முடியவில்லை. சுந்தர்ராஜன் இயக்கினார் என இளையராஜா சொல்லி இருந்தார்.