என் பாட்டு எனக்கு மட்டும்!.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா.. இதுக்கு எண்டே இல்லயா!..

தமிழ்சினிமா உலகின் ராகதேவன், இசைஞானி என்று எல்லோராலும் போற்றப்படுபவர் இளையராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். இவரது இசையில் பாடல்கள் மக்களோடு கலந்தது. தமிழ் பண்பாட்டோடு அடையாளமாக இருக்கக்கூடியது. சமீபத்தில் அவரோட பாடல்களுக்கான காப்புரிமை குறித்து வழக்கு தொடுத்துள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்கள் ரொம்ப நாளா எங்களோட பாடலை வைத்துள்ளார்கள். எனக்கான காப்புரிமையைத் தரணும்னு அவர் கேட்டுருக்காரு. இது சரிதானான்னு பார்ப்போம்.

இதையும் படிங்க... ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க!.. புளூசட்டமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் ஆண்டனி..

இசையைப் பொறுத்தவரை இது அறிவுசார்ந்த ஒன்று. வெளிநாட்டு இசை அதை யார் உருவாக்குகிறார்களோ அவர்கள் மட்டும் தொடர்புடையது. இந்திய இசை 95 சதவீதம் சினிமாவோடு கலந்தது. தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் எல்லோரும் இந்தப் பாட்டுக்குள்ள உள்ளே வர்றாங்க. அப்படி என்றால் இதை ஒருத்தர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

2018-19களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேல் இளையராஜா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் நம்ம எல்லாம் இனி பாட முடியாது. காப்புரிமை கேட்பாருன்னு சொன்னாங்க. இந்த சர்ச்சைக்குப் பிறகு இப்படி ஒரு சர்ச்சை கிளம்பிருக்கு. பொதுவாக 3 படிநிலை இருக்கு. இந்த இசையை உருவாக்கக்கூடிய தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர். இங்கு தயாரிப்பாளர் தான் இசையைப் பணத்தைக் கொடுத்து உருவாக்கச் சொல்கிறார். இவர் இசை நிறுவனங்களிடம் விற்கிறார். இன்னொரு பக்கம், அது அறிவுசார்ந்த சொத்து. இசை அமைப்பாளர்களாக உருவாக்குவது. இசை, ஓவியம், சிலை எல்லாம் அறிவுசார்ந்த சொத்து.

அதே போல பாடலுக்கான ராயல்டியில் பங்குத்தொகை தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்களுக்குப் போகிறது. ஆனால் பாடகர்களுக்குக் கிடையாது. பாடகர்கள் எப்போதுமே அதே பாடலை இசைக்கச்சேரிகளிலும் பாடி சம்பாதிக்கின்றனர். இசைநிறுவனங்கள் அந்தப் பாடலைக் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விட்டு தன்னோட காலம் வரை அந்தப் பாடலை வைத்து சம்பாதித்து வருகின்றனர்.

SPB

SPB

அதே நேரம் காப்புரிமை என்பது இது எனக்கானது என்பது தான். இந்த சொத்து விற்பனைக்குப் போனால் அவர்களுக்கே முழுசாக சொந்தமானதா என்று கேள்வி எழுகிறது. ஆனால் நீதிபதி இது முழுமையாக அந்த நிறுவனத்துக்கே சொந்தம். ஆனால் தார்மீக அடிப்படையில் இளையராஜாவுக்குப் பங்கு இருக்கு என்றும் சொல்லி இருக்கிறார்.

இளையராஜாவின் பாடல்கள் முழுவதையும் எக்கோ நிறுவனம் தான் வாங்கிருக்காங்க. அவர்களும் நிறைய சம்பாதித்து இருக்காங்க. அதே போல இசைக்கச்சேரிகளில் கலந்து கொண்ட பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்பட பலரும் நிறைய சம்பாதித்து இருக்காங்க. வெளிநாடுகளில் கச்சேரிக்கு அழைக்கும் போது இளையராஜாவிடம் பேசினால் அவர் ஒரு குறிப்பிட்ட தொகை சொல்கிறார். அதே நேரம் அவர்கள் பாலசுப்பிரமணியத்திடம் பேசினால் அவர் குறைந்த அளவு தொகையை சொல்கிறார்.

இதையும் படிங்க... உங்களுக்கு மொத்தம் எத்தனை புருஷன்கள்?!.. கோபப்படாமல் கூலாக பதில் சொன்ன அம்பிகா…

இது இளையராஜாவின் காதுகளுக்கும் எட்டுகிறது. அப்போது குழப்பம் வருகிறது. எஸ்.பி.பி.யும் இப்போது இல்லை. இந்த நிலையில் இளையராஜா இப்போது காப்புரிமையைக் கேட்பது பல சர்ச்சைகளை எழுப்புகிறது. அவரைப் பலரும் குறை சொல்கின்றனர். அவரைப் பொறுத்தவரை இது அவருடைய அறிவுசார்ந்த சொத்து. அவருக்கு தார்மீக உரிமை உண்டு. அவர் பாதுகாப்பு கேட்பது எந்த வகையில் தப்பு என்றும் பார்க்கப்படுகிறது. இதை குழுவாக சேர்ந்து பேசி என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story