பாடுறது மட்டும்தான் உன் வேலை!.. பாடகியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இளையராஜா…
தனது பாடல்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. மெல்லிசையை கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மண்வாசனையுடன் கூடிய நாட்டுப்புற இசையை அறிமுகம் செய்தவர். அன்னக்கிளி படம் துவங்கி இன்று விடுதலை வரைக்கும் 1500 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். இப்போதும் இவரின் பாடல்கள்தான் 70,80 கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. பல கார் பயணங்களில் அவரின் இசைதான் மனதை வருடும் தென்றலாக உலவி வருகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், மனோ, எஸ்.ஜானகி,சித்ரா, ஸ்வர்ணலதா உள்ளிட்ட சில பாடகர்களை மட்டும் வைத்துக்கொண்டு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். பல திரைப்படங்கள் இவரின் பாடல்களாலேயே ஓடியுள்ளது. அதேபோல் காட்சிளுக்கு சிறந்த பின்னனி இசை அமைப்பதிலும் வல்லவர்.
இசையில் ஞானி என்றாலும் டக்கென கோப்பப்படும் பழக்கம் உள்ளவர் ராஜா. ஒருமுறை இசையமைப்பாளர் தேவா இசையமைத்த ஒரு பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா இருவரும் இணைந்து பாடவிருந்தனராம். ஆனால், அந்த பாடல் வரிகளில் ஏராளமான இரட்டை அர்த்தங்கள் இருந்ததால் ‘என்னால் இந்த பாடலை பாட முடியாது’ எனக்கூறிவிட்டு எஸ்.பி.பி. சென்றுவிட்டாராம். அவரை போல் சொல்ல முடியாத சித்ரா ‘இந்த வரிகளை கொஞ்சம் மாற்றி கொடுங்கள் பாடுகிறேன்’ என தேவாவிடம் சொல்ல அந்த பாடல் அப்போது ரெக்கார்டிங் செய்யப்படவில்லை. அதன்பின் அந்த பாடல் வேறு பாடகர்களை வைத்து பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் கோபமடைந்த இளைராஜா பாடகி சித்ராவிடம் ‘உன் வேலை பாடுறது மட்டும்தான். வரியில என்ன இருக்குன்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது. இயக்குனர் சொன்ன சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் பாடலாசிரியர் அந்த பாடலை எழுதியிருப்பார்’ என திட்டிவிட்டாராம்.
இந்த தகவலை பாடகி சித்ரா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.