இளையராஜா இசைல நாம மயங்கி கிடக்குற ரகசியம் தெரியுமா!. அவருக்காகவே பொறந்தவரு இவருதான்!..

by sankaran v |
IR SPB
X

IR SPB

80, 90களில் இளையராஜா தான் தமிழ்சினிமாவின் வெற்றியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர். அவர் மியூசிக் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவில் இருந்தது. மொக்கையான படங்கள் கூட அவரது இசையால் ஹிட் அடித்த காலங்களும் உண்டு.

அவரது இசையில் நாம் மயங்கிக் கிடப்போம். அவரது பாடல்கள் நமது சோகத்துக்கு மருந்தாகும். நமது உற்சாகத்தையும் ஊற்றாகப் பெருக்கச் செய்யும். அதற்கு அவர் பயன்படுத்தும் யுக்தி என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

இளையராஜாவின் இசையில் பெரும்பாலான பாடல்களில் தபேலா, மிருதங்கம், டிரம்ஸ், கீபோர்ட், புல்லாங்குழல் கருவிகளின் இசை அதிகமாக இடம்பெறும். குறிப்பாக பேஸ் கிட்டாரின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும். இதை இன்னும் உன்னிப்பாகக் கேட்க வேண்டுமானால் கரோக்கியை கேட்டு மகிழலாம். உதாரணத்திற்கு ஒரு பாடலைப் பார்ப்போம்.

பாடும் வானம்பாடி.... ஹ என்று ஒரு பாடல். 1984ல் வெளியான நான் பாடும் படத்தில் தான் இந்தப் பாடல் வருகிறது. இந்தப் பாடலில் முதல் வரியான பாடும் வானம்பாடி... ஹ... மார்கழி என பாடி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிறுத்துவார். அப்போது பேஸ் கிட்டார் தான் அதை பில்லப் செய்யும்.

Padum vanampadi song

Padum vanampadi song

அதே போல அந்தப் பாடலின் சரணத்தில் பாவை வண்ணம் கோயில் ஆகும்.. பார்வை காதல் பூச்சூடும் என்று முதல் வரியைப் பாடி முடிக்கவும் அதை புல்லாங்குழல் இசை பில்லப் செய்யும்.

இதுதான் நாம் ராஜாவின் இசையில் மயங்கிக் கிடப்பதற்கு காரணம் என்று கூட சொல்லலாம். இந்தப் பாடலில் இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் உண்டு. இரு வாத்தியங்கள் ஆதிக்கம் செலுத்தும். அவற்றில் ஒன்று சித்தார். இன்னொன்று புல்லாங்குழல். இதில் சித்தார் கேள்வி கேட்க, புல்லாங்குழல் பதில் சொல்வது போல இசை அமைத்து இருப்பார் இசைஞானி.

சித்தாருக்கு துணையாக மிருதங்கம் வரும். அதன்பிறகு புல்லாங்குழல். தொடர்ந்து ஸ்ட்ரிங்ஸ்சின் மாயாஜாலம். எஸ்பிபியும், இளையராஜாவும் சிறந்த ஜோடி தான். இளையராஜாவின் இசைக்காகவே எஸ்.பி.பி. பிறந்திருப்பார் போல என்று கூட நினைக்கத் தோன்றும். இருவரும் இணைந்து விட்டால் இனிமையான பாடல்களுக்குப் பஞ்சம் இருக்காது.

Next Story