என்னை அவமானப்படுத்தினார் எம்.எஸ்.வி! மறக்கவே மாட்டேன்! இளையராஜா சொல்றத கேளுங்க!..
Ilayaraja: சினிமா உலகில் எப்போதும் போட்டி பொறமை அதிகம். அதற்கு காரணம் வாய்ப்பு கிடைத்து மேலே வந்துவிட்டால் பல கோடி சம்பளம் வரும். பணம், பேர், புகழ் என எல்லாம் கிடைக்கும். மக்கள் விரும்பும் ஒரு பிரபலம் ஆகிவிடுவான் என நினைத்தே அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் மேலே ஏற்றிவிட மாட்டார்கள்.
நடிப்பு, இயக்கம் இசையமைப்பாளர் என எந்த துறைக்கு போனாலும் கடுமையான எதிர்ப்புகளும், அவமானங்களையும், நிராகரிப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி சந்தித்துதான் புதுமுக நடிகர்களும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் உருவாகிறார்கள்.
இதையும் படிங்க: ஒரு கோடி தேடி வந்தும் உதறித் தள்ளிய அஜித்… ரசிகர்கள் மேல் எவ்வளவு அன்பு?!
சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. போராடி மேலே வரவேண்டும். அப்படி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வந்தவர்தான் இளையராஜா. தன்னை நம்பி மட்டுமே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். சிலரிடம் முறையாக இசைக்கருவிகளை வாசிப்பதற்கு கற்றுக்கொண்டார்.
ஜிகே வெங்கடேஷ் உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக சில வருடங்கள் வேலை செய்தார். அதன்பின்னரே இசையமைப்பாளராக முடிவெடுத்து வாய்ப்பு தேடினார். பலரும் அவரை அவமானப்படுத்தினார்கள். இறுதியாக கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை அன்னக்கிளி படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
சிறுவனாக இருந்த போதிலிருந்தே எம்.எஸ்.வி.யின் பாடல்களை மிகவும் ரசித்தவர்தான் இளையராஜா. சென்னை சென்றதும் அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை. இளையாராஜாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானதும் எம்.எஸ்.வி. இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது.
இந்நிலையில், ‘முதன் முதலில் நீங்கள் போன வெளிநாடு எது?.. அங்கு உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வு எது?’ என நிகழ்ச்சியில் கல்லூரி மாணவி இளையராஜாவிடம் கேட்டபோது ‘நான் அன்னக்கிளி, பத்திரகாளி, தீபம் என 3 படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்த நேரம் மலேசியாவுக்கு இசை கச்சேரி நடத்த போனேன். அதுதான் நான் முதன் முதலில் போன வெளிநாடு.
அந்த நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும் வந்திருந்தார். 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. மேடையில் பேசிய அவர் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனை புகழந்து பேசியதோடு, அவரோடு என்னை ஒப்பிட்டு என்னை மட்டம் தட்டி பேசினார். அதை நான் மறக்கவே இல்லை’ என சொன்னார் இளையராஜா.
இதையும் படிங்க: இளையராஜா நேரில் பார்க்க ஆசைப்பட்ட ஒரே சினிமா பிரபலம் இவர்தான்!.. ஆனா நடந்ததே வேற…