நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை இலியானா.. பிரபல நடிகை வெளியிட்ட போட்டோக்களால் ஏற்பட்ட பரபரப்பு!

பிரபல நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் கேடி & தேவதாசு ஆகிய படங்களின் மூலம் அறிமுகமான நடிகை இலியானா டி குரூஸ். பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையானார். தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீ- என்ட்ரி கொடுத்தவர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருபவர். இலியானா, அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், ஆலோசனைகள் கூறுவதும் இதில் குறிப்பிடத்தக்கது. தற்போது Unfair & Lovely என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை இலியானா, நடிகர் விக்கி கவுஷால் & கத்ரினா கைப் மற்றும் சில சினிமா நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் செம்ம டிரெண்ட் ஆகியது குறிப்பிடத்தக்கது. பாடகர் பாட்ஷா உடன் இலியானா இணைந்து ஆடிய இந்தி ஆல்பமும் சமீபத்தில் ஹிட் அடித்தது.

இந்நிலையில் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது தோழியும் நடிகையுமான அனயா சிங் எடுத்த புகைப்படங்களை இலியானா வெளியிட்டுள்ளார். திருமணத்தை அறிவிக்காமலே இலியானா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சில ரசிகர்கள் இலியானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story