Cinema History
இளையராஜாவுக்கும் ஒரு லவ் ஃபெயிலர் ஸ்டோரி இருக்கு!.. அது யாருன்னு தெரியுமா?…
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே இவரின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. மிகவும் சுலபமாக, யாரும் பாடக்கூடிய, எளிமையான அதே நேரம் இனிமையான மெட்டுக்களை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
காதல், சோகம், விரக்தி, கோபம், விரக தாபம், புரட்சி என எல்லா மனநிலைக்கும் மெட்டுக்களை அமைத்து தான் ஒரு இசை ஜாம்பவான் என்பதை நிரூபித்தார் இளையராஜா. 80களில் இவரின் இசையை நம்பியே திரைப்படங்கள் உருவாகியது. கதை சுமார், நடிப்பு சுமார் என்றாலும் இளையராஜா பாட்டு போட்டால் படம் ஹிட் என்பது அப்போதைய இயக்குனர்களின் பெரும் நம்பிக்கையாக இருந்தது.
இதையும் படிங்க: 100 ஆண்டுகளாக யாருமே செய்யாத சாதனை… தட்டித் தூக்கிக் கெத்து காட்டிய இளையராஜா
பாடல்கள் மட்டுமில்லை. பின்னணி இசையிலும் அபார திறமை கொண்டவர் இளையராஜா. இயக்குனர்களால் வசனங்களால் சொல்ல முடியாமல் போன காட்சிகளில் தனது பின்னணி இசை மூலம் உயிர் கொடுத்தார். அதனால், அவரின் பின்னணி இசை இப்போது வரை பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
83 வயது ஆகியும் இன்னனும் திரைப்படங்களுக்கு இசை, இசை கச்சேரிகள், வெளிநாடு சென்று சிம்பொனி அமைப்பது என ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். ‘காதலின் தீபம் ஒன்று’ போல காதல் ரசம் சொட்டும் பல பாடல்களை போட்டவர் இளையராஜா. ஆனால், அவருக்கும் ஒரு காதல் தோல்வி இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
இசைக்கருவியை தனது பெயருக்கு முன்னால் கொண்ட ஒரு இசைக்கலைஞரை இளையராஜா காதலித்தாராம். ஆனால், ராஜாவின் காதலை அவர் ஏற்கவில்லை. சாதி, சமூகத்தை காரணம் சொல்லி ‘எங்கள் வீட்டில் இதை அனுமதிக்க மாட்டார்கள். உங்களுக்கு பணம், பேர், புகழ் எல்லாம் இருக்கிறது. வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என சொல்லி இருக்கிறார்.
ஆனால், இளையராஜாவோ மனம் மாறவில்லை. ஒருகட்டத்தில் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு அந்த பெண்மணி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். 8 வருடங்கள் கழித்தே அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். எனவே, வீட்டில் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இளையாராஜா.
தற்போது அந்த இசைக்கலைஞர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால், இளையராஜாவோ பெரும் புகழோடு வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்!.. மீண்டும் உடல்நிலை பாதிப்பா?.. கொளுத்தி போட்ட பிரபலம்!..