நான் என்ன மெண்டலா!. லவ்டுடே பிரதீப் செஞ்ச வேலையில் கடுப்பான பார்த்திபன்…

Published on: June 4, 2023
---Advertisement---

பார்த்திபன், தமிழ் சினிமாவில் இயக்குநராக நடிகராக தன்னை நிரூபித்தவர். கடந்த 1990களில் வந்த புதிய பாதை படம், இவருக்கு தமிழ் சினிமாவில் வெற்றிப்பாதையில் பயணத்தை ஏற்படுத்தி தந்தது. அந்த காலகட்டத்தில், முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து மணந்தார். 

 

சீதாவை பிரிந்த பார்த்திபன்

வழக்கம்போல, மற்ற நட்சத்திர தம்பதிகளை போலவே பார்த்திபன் – சீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர். அதன்பின், சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை சீதா மறுமணம் செய்து அவரையும் பிரிந்துவிட்டார். பார்த்திபன், சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். ஒத்த செருப்பு, இரவின் நிழல் படங்கள் பார்த்திபனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இப்போது, விளம்பர படங்களில் அதிகமாக பார்த்திபன் காணப்படுகிறார்.

பார்த்திபன்
Parthiban

கிண்டலடித்த வசனம்

சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னை கிண்டலடித்து லவ்டுடே படத்தில் வைக்கப்பட்டிருந்த வசனம் குறித்து, மனம் திறந்து பேசி இருந்தார் பார்த்திபன்.
அதுபற்றி பார்த்திபன் கூறியதாவது,

பக்காவா இருந்த பையனை, பார்த்திபன் மாதிரி பேச வெச்சுட்டியே – அப்படீன்னு லவ்டுடே படத்துல இந்த காட்சியை பார்த்ததும் நானும் சிரிச்சுட்டேன். தியேட்டர்ல மத்தவங்க  சிரிச்ச மாதிரி நானும் ரசிச்சுட்டேன். அப்புறம் பின்னாடி தான் தெரிஞ்சது  அதுல ஒரு குத்தல் இருக்குது. என்னடா நல்லா இருந்தியே, இப்ப பைத்தியம் ஆயிட்டியே, ன்னு சொல்றதுக்கு அந்த டைரக்டர் முயற்சி பண்றாருங்கறது எனக்கு தாமதமா தான் புரிஞ்சுது.. நான் பைத்தியம் இல்லே, இந்த வசனம் புரியாம போயிருந்தா, ஒருவேளை நான் பைத்தியமா இருந்திருக்கலாம். 

பார்த்திபன்
Pradeep

ஒரே மாதிரியான கதை 

இதுக்கு காரணம் என்னன்னா,  என்னோட அசோசியேட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி ஒரு கதை பண்ணி இருந்தாரு, அந்த கதையும், கோமாளி படத்தோட கதையும் ஒரே மாதிரி இருந்துச்சுன்னு  பிரச்னை ஆச்சு. பாக்யராஜ் முன்னலையில இந்த பிரச்னை பேசப்பட்டு, கிருஷ்ணமூர்த்திக்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட்டது. இது எப்பவோ முன்னாடி நடந்த ஒரு விஷயம். இதுல ஒரு சின்னதாக ஒரு பழிவாங்கலாமுன்னு தோணியதுதான் இது.  ஆனா லவ்டுடே எனக்கு ஏன் பிடிக்குமுன்னு பிரதீப்புக்கு வாய்ஸ் மெசேஜ் போட்டேன். பல இடங்களில், பல மேடைகளில் லவ்டுடே படம் பத்தி பேசிட்டு இருக்கேன்.

ஒருநாள் பக்குவம் வரும் 

எனக்கு இப்போது வந்த இந்த பக்குவம், பின்னால பிரதீப்புக்கும் ஒரு நாள் வரும், என்று அந்த நேர்காணலில் கூறி இருக்கிறார் பார்த்திபன். 

elango

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.