சன் டிவியில் ஒளிபரப்பான சொல்லுங்கண்ணே சொல்லுங்க இன்னும் காமெடி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு காமெடி நடிகராக உருவான இமான் அண்ணாச்சி நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காக்கிச்சட்டை மற்றும் சிங்கம் 2 போன்ற திரைப்படங்களில் தனது காமெடி மூலம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதன் மூலமே மக்களிடையே மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு காமெடி நடிகராக வலம் வந்தார். மேலும் இவர் இந்த சோவில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில் அவர் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களைப் பற்றி ஜாடை மாடையாக ஒரு படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டு மாமன்னன் திரைப்படத்தைப் பற்றி கூறியிருப்பது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க- நரம்புனு நினைச்சு உதாசீனப்படுத்தினா இசை வருமா? தனுஷால் ஆடிப்போன விஜய் ஆண்டனி – அப்படி ஒரு சம்பவம்
இந்த நிலையில் இமான் அண்ணாச்சி அவர் நடித்த ஒரு படத்தின் ஃப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டார்.மேடையில் அவர் பேசியதாவது, இன்றைய கால சினிமா மிகவும் மோசமான நிலையில் உள்ளது காரணம் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் நிறைந்த திரைப்படமே அதிகமாக வெளியாகி வருகிறது மேலும் மேல் தட்டு கீழ்த்தட்டு என தட்டு தட்டாக பிரித்து திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இது தமிழ் சினிமாவிற்கு நல்ல ஒரு முன்னேற்றம் அல்ல ஏனெனில் மக்கள் அனைவரும் சாதிய பாகுபாடுகள் கடந்து தற்சமயம் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படி குறிப்பிட்ட சாதியினர் தங்களுடைய சாதியை தூக்கி பிடிப்பதற்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுத்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாகும் என்று தற்சமயம் மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்ட மாரி செல்வராஜ் அவர்களை ஜாடை மாடையாக பேசியிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், இப்பொழுதெல்லாம் படம் பார்த்துவிட்டு வெளியே காரித்துப்பும் திரைப்படம் தான் மாபெரும் வெற்றி படமாக அமைகிறது. அந்தக் காலத்தில் எல்லாம் 100 நாள் 200 நாள் ஓடிய திரைப்படத்தின் இயக்குனர்கள் கூட இப்படி படம் எடுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் ஜாதியை வைத்து படம் எடுத்தால் மக்களிடையே ஒரு கிளர்ச்சியை உண்டு செய்யும் என்று அவங்கள பார்த்து நல்லா கத்துக்கோங்க அப்படின்னு இமான் அண்ணாச்சி அந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை வசை பாடினார்.
இதையும் படிங்க- நரம்புனு நினைச்சு உதாசீனப்படுத்தினா இசை வருமா? தனுஷால் ஆடிப்போன விஜய் ஆண்டனி – அப்படி ஒரு சம்பவம்
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…