Connect with us
banner

பாலிவுட்டை அடித்து நொறுக்கி முதல் இடத்தை பிடித்த விக்ரம்.! மாஸ் காட்டும் ஆண்டவர்.!

vikram

Cinema News

பாலிவுட்டை அடித்து நொறுக்கி முதல் இடத்தை பிடித்த விக்ரம்.! மாஸ் காட்டும் ஆண்டவர்.!

உலகநாயகன் கமல் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகின்றன. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

இத்திரைப்படம் இதுவரை இல்லாத கமல்ஹாசன் திரைப்பட அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும், முதல் நாள் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – இயக்குனர் பாலாவுக்கு நெருக்கடி.! தீபாவளிக்கு சூர்யா படம் ரிலீஸ்.! தயாரிப்பாளரின் பலே திட்டம்.!

தற்போது மேலும் ஓர் மகிழ்ச்சி செய்தியாக, பிரபல சினிமா இணையதள பத்திரிக்கை பக்கமான ஐஎம்டிபி (imdb) பக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் லிஸ்டில் முதலிடத்தில் விக்ரம் திரைப்படம் உள்ளது. அதற்கடுத்ததாகதான் மேஜர் எனும் தெலுங்கு படம், பிரிதிவிராஜ் எனும் ஹிந்தி திரைப்படம் கூட இருக்கிறது. இது விக்ரம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது.

நிச்சயம் வரும் வெள்ளிக்கிழமை ஓர் தீபாவளி போல அனைத்து திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிய போவது தற்போது உறுதியாகிவிட்டது. பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் காட்சி விறுவிறுவென புக் ஆகி வருகின்றன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top