அதுக்குள்ள 2வது கல்யாணமா?!..உன் கூட வாழ்ந்த நான் ஒரு முட்டாள்!...குமுறும் இமானின் முன்னாள் மனைவி

by சிவா |   ( Updated:2022-05-18 07:19:21  )
monica
X

நடிகர் இமான் அவரின் மனைவி மோனிகாவை சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார். மேலும், அமலி என்பவரை கடந்த 15ம் தேதி 2வது திருமணம் செய்து கொண்டார். இமானுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விவாகரத்துக்கு பின் அவர்கள் இமானின் முன்னாள் மனைவி அமலியுடம் வாழ்கின்றனர். தற்போது அவர் திருமணம் செய்துள்ள அமலிக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

monica

இந்நிலையில், தனது 2வது திருமணம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள இமான் தனது மகள்களை மிஸ் செய்வதாகவும், அமலியின் மகளை தனது 3வது மகளாக நினைப்பேன் எனவும் உருகியுள்ளார்.

iman

இதைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா தனது டிவிட்டர் பக்கத்தில் இமானுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘உங்களின் 2வது திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள். உங்களுடன் 12 வருடமாக வாழ்ந்த ஒருவரின் இடத்தில் இவ்வளவு சீக்கிரமாக ஒருவரை உங்களால் மாற்ற முடியும் எனில் உங்களின் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்.

twitt

உங்களுடன் என் காலத்தை வீணடித்துவிட்டேன். கடந்த 2 வருடங்களாக உங்களின் குழந்தைகளை நீங்கள் பார்க்கவும் இல்லை அவர்கள் மீது உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், ஆச்சர்யமாக அவர்களுக்கும் மாற்று தேடிவிட்டீர்கள். என்னவானாலும் உங்களின் தந்தையிடமிருந்து என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன்.மேலும், எனக்கு தேவையெனில் இன்னொரு குழந்தையும் நான் பெற்றுக்கொள்வேன்’ என பதிவிட்டுள்ளார்.

Next Story