இந்த 4 நடிகர்களை கமல் படங்களில் அதிகமா பார்க்கலாம்.. யார் யார்னு தெரியுமா?

Published on: April 11, 2023
---Advertisement---

ஒவ்வொரு நடிகர்களும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த சில நடிகர்களை கூட வைத்துக்கொள்வதுண்டு. உதாரணமாக வடிவேலு காமெடிகளில் பார்த்தோம் என்றால் வடிவேலு சில நடிகர்களை அவரது காமெடிகளில் அடிக்கடி பயன்படுத்துவார்.

அதே போல நடிகர் கமல்ஹாசனும் கூட தனக்கென ஒரு நடிப்பு வட்டாரத்தை கொண்டுள்ளார். அந்த நடிகர்களோடு நடிக்கும்போது சிறப்பாக நடிக்க முடியும் என்பதற்காக தொடர்ந்து அவரது திரைப்படங்களில் இவர்களை பயன்படுத்தியிருப்பார். அப்படி உள்ள நடிகர்களில் முக்கியமான 5 நடிகர்கள் உள்ளனர்.

நாசர்:

கமலுடன் கூட்டணி போட்டு பல படங்களில் நடித்துள்ளார் நாசர். உள்ள நடிகர்களிலேயே நாசர்தான் கமலுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தேவர் மகன், அன்பே சிவம், உத்தம வில்லன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதர்கள், குருதி புனல் இன்னும் ஏராளமான படங்களில் நாசர் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார்.

நாசரின் நடிப்பு திறன் காரணமாக அவரை தொடர்ந்து தனது படங்களில் கமல்ஹாசன் வைத்துக்கொண்டார்.

நாகேஷ்:

நடிகர் நாகேஷ் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலக்கட்டத்தில் இருந்தே சிறப்பாக நடிக்க கூடிய நடிகராவார். இவர் கமல்ஹாசனோடு இணைந்து வசூல் ராஜா, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதர்கள், நம்மவர், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சந்தான பாரதி:

கமல் கூட்டணியில் உள்ள நடிகர்களில் சந்தான பாரதிக்கும் முக்கிய இடம் உண்டு. மேலும் சினிமாவில் அவரது முகம் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கும் கமல் முக்கிய காரணமாக இருந்துள்ளார். தற்சமயம் விக்ரம் திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் சந்தான பாரதி நடித்திருந்தார்.

தசவதாரம், மகாநதி, அபூர்வ சகோதர்கள், அன்பே சிவம், மைக்கேல் மதன காமராஜன் இன்னும் பல படங்களில் சந்தான பாரதி கமலுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராவார். அதையும் தாண்டி அவர் சிறப்பான நடிகராவார். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிப்பவர். அவ்வை சண்முகி படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

இவர் கமலுடன் இணைந்து நாயகன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதர்கள், தெனாலி, மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவருக்கு ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவருமே சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களாக இருப்பதால் கமல் தனது படங்களில் தொடர்ந்து இவர்களுக்கு வாய்ப்பளித்து வந்துள்ளார்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.