த்ரிஷா படத்தில் நடித்த அந்த சின்னப் பொண்ணா அது? ‘7ஜி ரெயின்போ காலனி - 2’ வில் இந்தப் பாப்பாதான் ஹீரோயினாம்

by Rohini |
trisha
X

trisha

2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தின் மூலம் ரவி கிருஷ்ணா அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். செல்வராகவன் எழுதி இயக்கிய இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

படம் வெளியாகி இளசுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலின் ஆழத்தையும் அதனால் ஏற்படும் வலியையும் இந்தப் படம் மிக அற்புதமாக வெளிப்படுத்தியது. தன் காலனியிலேயே குடியிருக்கும் சோனியாவை ஒருதலையாக காதலிக்கிறார் ரவிகிருஷ்ணா. ஆனால் அது சோனியாவுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: ஊருக்குதான் உபதேசம்! உள்ள ஒரே அழுக்கு – உதயநிதி செஞ்ச வேலையால் கதி கலங்கி நிற்கும் தயாரிப்பாளர்

துரத்தி துரத்தி காதலிக்க ஒரு கட்டத்தில் சோனியா சம்மதம் தெரிவித்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதுவரை பொறுப்பில்லாத இளைஞனாக சுற்றித் திரிந்த ரவி ஒரு வேலையில் சேர்கிறார். இவர்களின் காதல் சோனியாவின் வீட்டிற்கு தெரியவர வீட்டையே காலி செய்து சோனியா பிரிந்து விடுகிறார்.

பின் அவர் வீட்டிலேயே சிறை வைக்கப்படுகிறார். ஒரு சமயம் சோனியாவை வரச் சொல்லி ஒரு சுற்றுலா விடுதியில் ரவியும் சோனியாவும் உடலுறவு கொள்கின்றனர். அந்த நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட சோனியா வேகமாக வெளியே ஓடி வர ஒரு வாகனத்தில் மோதி இறந்து விடுகிறார். அவர் நினைவாகவே ரவி தன் வாழ்க்கையை கழிக்கிறார்.

இதையும் படிங்க: தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை! ரஜினி படத்தின் அடுத்த வில்லன் இவர் தான்!

இப்படி உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்ட 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் முயற்சியில் இப்போது செல்வராகவன் இறங்கியிருக்கிறார். இரண்டாம் பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நடிக்கிறார்.

ஆனால் ஜோடியாக த்ரிஷா நடித்த ராங்கி படத்தில் த்ரிஷாவின் அண்ணன் பொண்ணாக ஒரு சின்ன பெண் நடித்திருப்பார். அவர்தான் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாராம்.

Next Story