என்னது ‘7ஜி ரெயின்போ காலனி-2’வில் இவங்கதான் ஹீரோயினா? பேசியே கொண்டுருவாங்களே?
தமிழ் சினிமாவில் காதலர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக 7ஜி ரெயின்போ காலனி படம் அமைந்தது. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படம் பெரும் வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமில்லாமல் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களிலேயே இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக அமைந்தது.
காதலின் உணர்வை மிகவும் ஆழமாக வெளிப்படுத்திய படம்தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருப்பார். சோனியாவின் நடிப்பு மிகவும் அமைதியான கதாபாத்திரமாக அமைந்திருக்கும். மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரமாகவும் அமைந்தது.
இதையும் படிங்க : விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடிக்க வேண்டாம்- கண்டிஷன் போட்ட அஜித்! ஓ இது தான் பிரச்சனையா!!
இந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனியின் செகண்ட் பார்ட் வருமா வராதா என்று ரசிகர்கள் மிகவும் ஏங்கி போயிருந்தனர். அவர்கள் ஆசையை நிறைவேற்ற இருக்கிறார் செல்வராகவன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது,
படத்தில் ஹீரோவாக ரவி கிருஷ்ணாதான் நடிக்கிறாராம். ஆனால் ஹீரோயின் சோனியா இல்லை என்பது முற்றிலுமாக தெரிந்த விஷயம். அப்படியென்றால் அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்ற ஆவல் அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் சோனியா இறந்துவிடுகிற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இரண்டாம் பாகத்தில் ஒரு புது கதாபாத்திரத்தை தான் அறிமுகம் செய்வார் செல்வராகவன். அப்படி இருக்கும் போது நடிகையை தேடும் படலத்தில் படக்குழு இருக்க நடிகை அதிதி சங்கரை ஹீரோயினாக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே அதிதி அதர்வாவின் தம்பி ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
அப்படி இருக்கும் போது அடுத்த மாதம் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில் எப்படி நடிப்பார் என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால் அதிதியை தான் ஒப்பந்தம் செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது.
இதையும் படிங்க : கடைசிநாள் படப்பிடிப்பில் ஏமாற்றிய விஜய்!.. அப்செட்டில் லியோ படக்குழுவினர்.. தளபதிக்கு என்னாச்சி!…