காம்பரமைஸ் ஆகாத ஆளு! இந்த படமே வேணானு சொன்ன தேவா - அஜித் படத்தில் ஏற்பட்ட சலசலப்பு

deva
Music Director Deva: தமிழ் சினிமாவில் தேனிசை தென்றல் என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளார் தேவா. கானா பாடல்களுக்கு பேர் போனவர். அஜித், விஜய், பிரசாந்த் போன்றவர்களின் படங்களில் பெருமளவு பாடல் ஹிட்டாகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் தேவா.
இளையராஜா, ஏஆர் ரஹ்மான் போன்றவர்கள் பீக்கில் இருக்கும் போதே தனது கானா பாடல்கள் மூலம் மக்களிடம் வரவேற்பை பெற்றார். இவரின் இசையில் பல இனிமையான காதல் பாடல்களும் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் அஜித் நடித்த ஆசை திரைப்படம் கதை விதத்தில் ஹிட் அடித்தாலும் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இதையும் படிங்க: எங்களை கொச்சைப்படுத்திட்டாரு!.. மன்சூர் அலி கான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.. புது பிரச்சனை!
படத்தை இயக்குனர் வசந்த் இயக்க தேவாதான் இசையமைத்திருக்கிறார். வசந்தை பொறுத்தவரைக்கும் அவ்வளவு சீக்கிரம் காம்ப்ரமைஸ் ஆகவே மாட்டாராம். தேவா கிட்டத்தட்ட 20 டியூன்களுக்கு மேலாக போட்டிருப்பாராம். ஆனால் எதுவுமே வசந்திற்கு பிடிக்கவில்லையாம். கம்போஸ் பண்ற இடத்தில் 200 தடவையாவது உட்கார்ந்து கேட்டுவிட்டு போவாராம்.
அதன் பிறகே பாடல்கள் ரிக்கார்டிங் ஆகியிருக்கிறது, இந்தப் படத்தின் வெற்றி அடுத்த படத்திலும் தேவா இருக்க வேண்டும் என வசந்த் நினைத்திருக்கிறார். விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான படம் நேருக்கு நேர். இந்தப் படத்தின் ஆஃபர் வந்ததும் என்னால் முடியவே முடியாது என தேவா சொன்னதாக செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் மீது செம காண்டு போல!.. மேடையில் சிவகார்த்திகேயன் இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!..
ஆனால் எப்படியோ பேசி தேவாவை சமாளிக்க வைத்து பின் இந்தப் படத்தில் இசையமைக்க வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லால் ஆசை பட சமயத்தின் போது தேவா வளர்ந்து வந்து கொண்டிருந்தார். அதனால் இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப இருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் அந்தப் பட வெற்றி தேவாவை எங்கேயோ கொண்டு சென்றது.