படம் முழுக்க டூப் போட்டு ஏமாத்திய கமல் – அந்த டூப் நடிகர் யார் தெரியுமா?..

Published on: December 15, 2023
kamal
---Advertisement---

Actor Kamal: கமல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் ஆளவந்தான். 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க தாணு படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்தப் படத்தில் ஏகப்பட்ட புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தினார் கமல்.

ஆனால் எதிர்பார்த்த அளவில் படம் போகவில்லை. தயாரிப்பாளருக்கு  நஷ்டத்தையே ஏற்படுத்தியது. ஒரு பத்திரிக்கையில் கூட அப்போது தாணு ‘இது ஆளவந்தான் இல்லை. என்னை அழிக்க வந்தான்’ என்றே கூறியிருப்பார்.

இதையும் படிங்க: கே.ஆர்.விஜயா தயாரித்த படத்தில் ரஜினிகாந்தை சிபாரிசு செய்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?

அதிலிருந்தே தாணுவுடன் கமல் இணையவே இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில் ஆளவந்தான் படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து சில காட்சிகளை கட் செய்து விட்டு படத்தை தாணு ரி ரிலீஸ் செய்தார். இந்தக் காலத்திற்கு ஏற்ற கதை என்ற அடிப்படையில் படத்தை ரி ரிலீஸ் செய்தார்.

ஆனாலும் சுமாராகத்தான் பேசப்படுகிறது. இந்த  நிலையில் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிகர் ரியாஸ்கான் நடித்திருப்பார். அதாவது நந்து கேரக்டரில் இருக்கும் கமல் ஜெயிலில் இருக்க தப்பிக்க வேண்டும் என்ற  முயற்சியில் தன் உடல் ஒத்த ரியாஸ்கானை பயன்படுத்திக் கொண்டு ஜெயிலில் இருந்து தப்பித்துவிடுவார்.

இதையும் படிங்க: என்னங்கப்பா எல்லாரும் இங்கையே தங்கிட்டீங்க.. அனிருத் லிஸ்ட்டில் அடுத்த வருடம் இத்தனை படங்களா..?

இது அந்த ஒரு சீனுக்கு மட்டும் பொருந்தாது. படமுழுக்க கமலுக்கு டூப் போட்டு நடித்தவராம் ரியாஸ்கான். அதை நேற்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கூடவே ரியாஸ் மனைவியும் இருந்தார். அவர்தான் ‘இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. படத்தையும் ரி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இப்ப கூட சொல்லவில்லை என்றால் அது நன்றாக இருக்காது. சொல்லிவிடுங்கள் என ரியாஸை பார்த்துக் கூறிகிறார்.

அதற்கு ரியாஸ்கான் ‘இதுவரை இதை நான் எங்கும் வெளியில் சொல்ல வில்லை. ஒரு சீனில் தான் கமலுக்கு டூப் போட்டு நடித்தேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் பாடி டபுள் என்று படமுழுக்க கமலுடனேயே பயணம் செய்திருக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இது செம ஆபர்!.. ஷாப்பிங் போன இடத்தில் மிரண்டு போன மீரா கிருஷ்ணா.. வீடியோ பாருங்க..

அதாவது பாடி டபுள் என்பது முகத்தை மட்டும் மறைத்து படமாக்கிய பின் எடிட்டிங்கில் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்களோ அவர்களின் உண்மையான முகத்தை அப்படியே பொருத்திவிடுவது. இதில்தான் கமலின் நந்து கதாபாத்திரத்தில் பெரும்பாலும் டூப் போட்டது ரியாஸ் என்று சொல்கிறார்கள். அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்குத்தான் தெரியும் என அவரது  மனைவியும் கூறியிருக்கிறார்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.