‘அன்பே வா’ படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை!.. கண்கூடாக பார்த்த எம்ஜிஆர்.. செட்டில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்..
எம்ஜிஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரத்தை இன்று வரை தமிழக மக்கள் தங்கள் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் மிகப் பெரிய கொடை வள்ளலாகவும் அடுத்தவரின் துன்பத்தை தன்னுடைய துன்பமாகவும் பார்த்தவர் எம்ஜிஆர்.
யாருக்காவது அநீதி நடக்கிறது என்றால் முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பவராகவும் விளங்கினார். அந்த அளவுக்கு உன்னதமான நடிகராக வலம் வந்தார் எம்ஜிஆர். பார்ப்போரை கவர்ந்திழுக்கும் தோற்றம், பால் போன்ற முகம் என இன்றளவும் ரசிக்க வைக்கும் மென்மை படைத்தவராக திகழ்கிறார் எம்ஜிஆர்.
இதையும் படிங்க : விஷாலுக்கு ஏற்பட்ட இப்படி ஒரு அவல நிலைக்கு என்ன காரணம் தெரியுமா?? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்…
அவர் மறைந்தாலும் அவரின் புகழ் இன்னும் ஏழேழு ஜென்மத்திற்கு நின்னு பேசும். அப்படிப் பட்ட எம்ஜிஆரை வைத்து பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்திருக்கின்றனர். ஆனால் ஏவிஎம் நிறுவனத்திற்கு எம்ஜிஆர் ஒரே ஒரு படம் மட்டுமே செய்து கொடுத்திருக்கிறார். அந்தப் படம் தான் ‘அன்பே வா’ திரைப்படம். இந்த படத்தை ஏசி.திருலோகச்சந்தர் இயக்கினார்.
படத்தை ஏவிஎம் சரவணன் தயாரித்தார். இந்தப் படத்தில் எஸ்.பி. முத்துராமன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். எஸ்.பி.முத்துராமன் கூறும் போது எம்ஜிஆரை வைத்து எப்படியாவது ஒரு படம் இயக்க வேண்டும் என எண்ணினேன், ஆனால் அந்த நேரத்தில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்ததால் என்னால் இயக்க முடியவில்லை. ஆனால் அன்பே வா படத்தில் அவருடன் பணிபுரிந்ததில் மிகவும் சந்தோஷம் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : நிஜமாவே அஜித்தும் விஜய்யும் ஃப்ரெண்ட்ஸ்தானா?… ஏன் இவுங்க ரெண்டு பேரும் இப்படி இருக்குறாங்க!!
அந்த படத்தின் கதையை ஏசி. திருலோகச்சந்தர், சரவணன், எஸ்.பி,முத்துராமன் ஆகியோர் எம்ஜிஆரிடம் கூறும் போது இது எம்ஜிஆர் கதை இல்லை, ஏசி. திருலோகச்சந்தர் படமாக இருக்கும். என்னை ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் காட்ட ஆசைப்படுகிறார். அதனால் என் குறுக்கீடு இந்த படத்தில் இருக்காது என்றும் எம்ஜிஆர் கூறினாராம்.
படத்தை ஒரு செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட பொங்கலுக்கு ரிலீஸ் செய்தால் கலெக்ஷனை அள்ளலாம் என கருதி விரைவாக படத்தின் படப்பிடிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்க எம்ஜிஆர் ஒரு சமயம் செட்டிற்கு வந்தாராம். அப்போது செட் போடப்பட்ட வீட்டிற்கு தரையில் ஸ்டிக்கரை ஒரு ஊழியர் கொண்டிருந்தாராம்.
அவரை பார்த்த எம்ஜிஆர் அவரை வாரி அணைத்து கட்டிக் கொண்டாராம். அதன் பின் தன்னுடன் வந்த உதவியாளரை அழைத்து இவருக்கு தேவையானதை வாங்கி கொடு என்று அந்த ஊழியரை உதவியாளரிடம் அனுப்பி வைத்து கண்கலங்கி நின்றாராம் எம்ஜிஆர். இதை பார்த்த முத்துராமன், இயக்குனர்களிடம் எம்ஜிஆர் நான் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவர் தான் நாடகத்தில் ஹீரோவாக நடிப்பார் என்று கூறி கண்கலங்கினாராம். அடுத்த நாளில் இருந்து அந்த ஊழியர் வேலைக்கு வரவில்லையாம். எம்ஜிஆர் அவருக்கு எதாவது உதவிகளை கண்டிப்பாக செய்திருப்பார். அதனால் தான் வராமல் இருப்பார் என்று இந்த தகவலை எஸ்.பி.முத்துராமன் கூறினார்.