நானும் ஹீரோயின்தானே? ‘அவன் இவன்’ படத்துல பாலாவால் ஏமாந்ததுதான் மிச்சம்.. ஜனனி ஓப்பன் டாக்

by Rohini |
janani
X

janani

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை ஜனனி ஐயர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. குறிப்பாக தெகிடி, அவன் இவன், போன்ற படங்களை குறிப்பிடலாம். ஆனால் அம்மணி இப்போது படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார்.

janani1

janani1

இவருக்கு அட்வாண்டேஜ் மற்றும் டிஸ்அட்வாண்டேஜ் இரண்டும் இவருடைய கண்கள் தான். முட்ட கண்ணுடன் பார்ப்பவர்களை கொஞ்சம் பதற வைப்பார். குடும்ப பாங்கான முகம் , கவர்ச்சி இல்லாத நடிப்பு என ஓரளவு ரசிகர்களுக்கு பரீட்சையமானார்.

உங்களுக்கு பிடித்த நடிகைகள் லிஸ்டில் ஜனனியும் ஒருவராக இருப்பார். வாய்ப்புகள் குறைந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை ரசிக்க வைத்தார் ஜனனி.

janani2

janani2

இந்த நிலையில் சினிமாவில் நடிக்க வருபவர்கள் எப்படியாவது இந்த இயக்குனரோடு ஒரு படத்திலேயாவது நடிக்கவேண்டும் என வருவார்கள். அப்படி பட்டவர்களில் மணிரத்னம், ஷங்கர், பாலா, போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதில் ஜனனிக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கமிட் ஆனார்.

அப்போது அந்தப் படத்தில் ஹீரோயின் ஓப்பனிங் சீன். உடனே ஜனனி முதல் முறை தன்னை அறிமுகம் செய்யப்ப்போகிறார்கள் என்ற ஆசையில் தலையை நன்றாக வாரி மேக்கப் எல்லாம் போட்டு வந்து நின்றாராம். ஆனால் பாலா ‘என்ன இப்படி வந்து நிக்குற? போய் தலையை நல்லா கொழைச்சுட்டு வா’ என்று சொன்னாராம்.

அதாவது ஜனனி வீட்டில் விஷால் திருடுகிற மாதிரியான சீன். அப்போது தூக்கத்தில் இருந்த ஜனனி எழுந்து வருவார். அதனால் தான் பாலா தூக்கக் கலக்கத்தில் இருந்து எப்படி வருவோமோ அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி சொன்னாராம்.

janani3

janani3

இதை ஒரு பேட்டியில் கூறிய ஜனனி பெரிய எதிர்பார்ப்போடு போனேன், என்னை முதன் முறையாக அறிமுகம் செய்கிறார்கள், ஒரு ஹீரோயினை எப்படி காட்டுவாங்க? அப்படி போனேன். ஆனால் எல்லாம் போச்சு என புலம்பினார் ஜனனி.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் டார்கெட் விஜய்தான்! ‘மாவீரன்’ படத்திற்காக அவர் செய்ய போகும் சம்பவம்

Next Story