‘அயலான்’ படத்தில் மியூஸிக் டைரக்டரை மாத்திட்டாங்களா? என்னடா இது ரஹ்மானுக்கு வந்த சோதனை?

Published on: October 2, 2023
siva
---Advertisement---

Ayalan Movie: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில்உருவான திரைப்படம் ‘அயலான்’. சையின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக தயாரான இந்த அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

2016ஆம் ஆண்டிலேயே இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்களாக இந்தப் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. ஒருவழியாக படபிடிப்பு எல்லாம் முடிந்து வரும் பொங்கல் அன்று அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு நடந்த அதே பிரச்சினைதான் ஜெயலலிதாவுக்கும்! தைரியப்பெண்மணில – என்ன செய்திருப்பார்?

இது ஒரு ஏலியன் சம்பந்தப்பட்ட கதையாகத்தான் தயாராகியிருக்கிறது.அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே குழந்தைகள் கொண்டாடும் நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதில் இப்படி ஏலியன் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கும் போது இன்னும் குழந்தைகளுக்கே செல்லப்பிள்ளையாக சிவகார்த்திகேயன் மாறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ரஹ்மான்தான் இசை.

இதையும் படிங்க: நம்ம நினைச்சத அவன் சொல்லிட்டான்… இதனால் தான் விஜய் கம்முனு இருக்காரா? அடடே!

சமீபத்தில் தான் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு கொஞ்ச நாள்கள் அமைதி காத்து வந்த ரஹ்மான் இப்போதுதான் அயலான் திரைப்படத்திற்காக தன்னுடைய பின்னனி இசையை ஆரம்பித்திருக்கிறார்.

siva
siva

இது சம்பந்தமான ஒரு புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது. அதில் சிவகார்த்திகேயன், ரஹ்மான், இயக்குனர் ஆகியோர் அந்தப் புகைப்படத்தில் இருக்கின்றனர். கூடவே அயலான் திரைப்படத்தில் நடித்த ஏலியனும் உடன் இருக்கின்றது.

இதையும் படிங்க: அடேய் இதுக்கு தானா அது… இரண்டாவது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 போட்டியாளர்கள்…

அதுவும் ரஹ்மான் பக்கத்தில் அந்த ஏலியன் அமர்ந்து இசை அமைக்கும் விதமாக அந்தப் புகைப்படம் வெளியாகியிருக்கின்றது.இதை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அயலான் படத்திற்கு இசையமைப்பாளர் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.