Connect with us

Cinema History

படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, இன்று பிரபலமான நடிகர்கள் – ஒரு பார்வை

எவ்வளவு பெரிய உயரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் முதலில் அடிவாரத்தில் இருந்து தான் செல்ல வேண்டும். அப்போது தான் அந்த இடம் நிலையானதாக இருக்கும்.

இது சினிமாவிற்கும் பொருந்தும். இன்று டாப் அந்தஸ்தில் இருக்கும் பல நடிகர்கள் தாங்கள் அறிமுகமான காலகட்டத்தில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்தவர்கள் தான். அவர்கள் யார் யார் என்ற பட்டியலைப் பார்ப்போமா…

எஸ்.ஜே.சூர்யா

நடிகரும், இயக்குனருமான இவர் தமிழ்ப்பட உலகில் தனக்கென தனியிடம் பிடித்தவர். வாலி, குஷி என்ற இரு படங்களை இயக்கி அஜீத், விஜய் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அ…ஆ, நியூ, வியாபாரி, இசை போன்ற படங்களில் கதாநாயகனாகவும், சிம்பு நடித்த மாநாடு படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

SJ Surya in Netthi Adi

பாண்டியராஜன் இயக்கி நடித்த நெத்தியடி திரைப்படத்தில் இவர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதே போல் வசந்த் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ஆசை திரைப்படத்தில்,ஆட்டோ ஓட்டுநராக ஒரு காட்சியில் வருவார்.

திரிஷா

நடிகைகளில் உச்சநட்சத்திரம். இவர் தற்போது வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பேரழகியாக வந்து ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றார்.

Thrisha

இவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். நடிகை திரிஷா ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார்.

மிர்ச்சி சிவா

அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மிர்ச்சி சிவா. தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Mirchy siva

இவர் தனக்கே உரித்தான காமெடி கலந்த வசனத்தாலும், விஜய்டிவியின் லொள்ளு சபாவிலிருந்து வந்து அசத்தியதாலும் ரசிகர்களால் பெரும் வரவேற்புக்குள்ளானார். 12பி படத்தில் ஒரு காட்சியில் தோன்றிருப்பார்.

விஜய் சேதுபதி 

Vijay sethupathi in Puthupettai

தற்போது மாஸ் ஹீரோ அண்டு வில்லன் யாரென்றால் அது விஜய் சேதுபதி தான். விக்ரம் படத்தில் இவரது அசுரத்தனமான வில்லன் நடிப்பு காண்போரை கவர்ந்து இழுக்கச் செய்தது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக வந்து அதகளப் படுத்தினார்.

இவர் சின்னத்திரை சீரியலில் தொடங்கி, புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, பலே பாண்டியா, லீ, வெண்ணிலா கபடி குழு, சுந்தரபாண்டியன் போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார்.

விமல்

Vimal in kokarakokarako song Gilli

சாதாரண கதாநாயகனாக அறிமுகமாகி பர்பக்ட் நாயகன் ரேஞ்சுக்கு உயர்ந்தவர் நடிகர் விமல். இவரது படங்களில் பசங்க, களவாணி, வாகை சூட வா ஆகியவை சூப்பர்ஹிட் படங்கள்.

அலட்டல் இல்லாத நடிப்புக்கு சொந்தக்காரர். நடிகர் விமல், கில்லி திரைப்படத்தில், விஜய்க்கு நண்பராக நடித்திருப்பார். அஜீத் நடித்த கிரீடம் படத்திலும் நடித்துள்ளார்.

பாக்யராஜ்

நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் தமிழ்ப்பட உலகில் தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்றவர். இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பக் கதை அம்சங்கள் கொண்டவை.

திரைக்கதை எழுதுவதில் இவர் ஒரு மன்னர். யாராலும் எளிதில் யூகிக்க முடியாத காட்சி அமைப்புகளுடன் உருவாக்குவது இவரது தனிச்சிறப்பு.

Bhagyaraj

பாக்யராஜ், தன் குருநாதர் பாரதிராஜா திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றிருக்கிறார். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் வெயிட்டர் வேடத்தில் சத்தமில்லாமல் வந்து கலக்கி விட்டுச் செல்வார்.

பார்த்திபன்

நடிகரும், இயக்குனருமான ஆர்.பார்த்திபன் தற்போது ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகிவிட்டார். தமிழ்சினிமாவில் புதிய பாதை போட்டு தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்தார்.

Parthiban

அதே போல் பார்த்திபன், தன் குருநாதர் இயக்கிய தாவணி கனவுகள் திரைப்படத்தில் தபால்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .

ராணுவவீரன் படத்தில் பார்த்திபன் ஒரு காட்சியில் வந்து போவார்.

சமந்தா

samantha

மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமானார். பாணா காத்தாடி, நான் ஈ, கத்தி, தெறி படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா, விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஓர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top