சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருந்த முக்கிய பிரபலம்!.. மிஸ்ஸான கூட்டணி... இப்பவும் சான்ஸ் இருக்கு?!...
Nov 12, 2024, 17:20 IST
சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்தில் நடிகர் பகத் பாஸில் நடிக்க இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்க முடியாமல் போனதாம். சிவகார்த்திகேயனின் அமரன் படம்: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் வெளியான நாள் முதலே தற்போது வரை திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. இதையும் படிங்க: Thuppakki: துப்பாக்கி படத்தில் விஜயே இல்லை!.. அமரன் பட இயக்குனர் சொல்றத கேளுங்க!.. வசூல் சாதனை: படம் வெளியான முதல் நாளிலிருந்து மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கின்றது. நெகட்டிவ் விமர்சனங்களே இல்லாமல் இப்படம் தற்போது வரை திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. முதல் மூன்று நாளிலேயே 100 கோடி வசூல் செய்த அமரன் படம் தொடர்ந்து 12 நாட்களில் 250 கோடியை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. விரைவில் 300 கோடியை எட்டிவிடும் என்று கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயனின் மார்க்கெட்: அமரன் திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் எங்கேயோ சென்று விட்டது. தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களின் வசூலை அமரன் திரைப்படத்தின் மூலமாக முறியடித்து உச்சத்திற்கு சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மிக பிஸியான நடிகராக மாறி இருக்கின்றார். கைவச படங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைய இருக்கின்றது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும், அதற்கு அடுத்ததாக சுதா கொங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.
புறநானூறு: சூர்யா நடிப்பில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் அதர்வா நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹத் பாசில்: புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் பஹத் பாசிலை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது. பஹத் பாசிலுக்கு படத்தின் கதை பிடித்திருந்த காரணத்தால் முதலில் தான் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கின்றார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கின்றது. அதன்பிறகு தான் தற்போது நிவின்பாலி அந்த கதாபாத்திரத்திற்கு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகின்றது. இதையும் படிங்க: Kanguava: சொந்த ஊர்ல பிரச்சினை முடிஞ்சு பக்கத்து ஊர்ல பஞ்சாயத்தா? எவ்வளவுதான் தாங்குவாரு ‘கங்குவா’? மற்றொரு வாய்ப்பு: இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் துவங்க இருப்பதால் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் பஹத் பாசில் நடித்திருப்பார். மீண்டும் புறநானூறு திரைப்படத்தில் இவர்கள் கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.