மறைந்தும் வாழும் தெய்வம் எம்ஜிஆர்! இக்கட்டான சூழலில் இருந்த விஜயகுமாரிக்கு சின்னவர் செய்த பேருதவி

mgr
50 களின் ஆரம்பத்தில் தன் நடிப்பை தொடங்கியவர் நடிகை விஜயகுமாரி. இவருக்கு உண்டான சிறப்பு அம்சம் என்னவென்றால் பல புதுமுக இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்த நடிகை விஜயகுமாரி என்ற பெருமையை பெற்றவர். இயக்குனர் ஸ்ரீதரின் முதல் திரைப்படம் ஆன கல்யாண பரிசு அந்த படத்திலும் விஜயகுமாரி நடித்திருக்கிறார்.

mgr1
அது மட்டும் இல்லாமல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படமான சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய முதல் படமான பெண் என்றால் பெண், மல்லியம் ராஜகோபாலனின் முதல் படமான ஜீவனாம்சம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை விஜயகுமாரி. இப்போதெல்லாம் வுமன் சென்ட்ரிக் திரைப்படமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை அப்பவே செய்து காட்டியவர் விஜயகுமாரி. இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களே படத்தின் பெயர்களாகவும் அமைந்தன.
சிறந்த தம்பதிகள்
தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர் விஜயகுமாரியும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும். ஆஸ்த்தான தம்பதிகளாக வலம் வந்த இவர்களது வாழ்க்கையில் திடீர் சூறாவளி போல பிரச்சனை ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இயல்பாகவே பெரிய வீட்டுப் பிள்ளையாக வாழ்ந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு அந்த சமயம் பொருளாதார ரீதியாக ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை.

mgr2
ஆனால் விஜயகுமாரிக்கு அப்படி இல்லை. அப்பா, அக்கா, தங்கை என அனைவரையும் பார்த்துக்க வேண்டிய ஒரு கட்டாயம். அதனால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். ராமண்ணா இயக்கிய பவானி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தேனாம்பேட்டையில் இருந்து வீட்டை காலி செய்யுமாறு திடீர் பிரச்சனை ஏற்பட்டது.
இதையும் படிங்க : அப்ப்பா.. பாக்க பாக்க மூச்சு முட்டுது! கவர்ச்சியால் தீனி போடும் தமிழ் நடிகைகள்!
அந்த சமயத்தில் டிநகரில் ஒரு வீடு விலைக்கு வருவதாக விஜயகுமாரி கேள்விப்பட்டார். ஆனால் அந்த வீட்டை வீனஸ் கிருஷ்ணமூர்த்தி வாங்க போவதாகவும் அறிந்தார். ஏற்கனவே வீனஸ் கிருஷ்ணமூர்த்தியை கல்யாண பரிசு படத்தில் நடிக்கும் போதிலிருந்தே நன்கு அறிந்தவர் விஜயகுமாரி. அதனால் அந்த வீட்டை தனக்கு தரும்படி வீனஸ் கிருஷ்ணமூர்த்தி இடம் விஜயகுமாரி கேட்டார்.
தேவரை நாடிய விஜயகுமாரி
மேலும் தனக்காக ஒரு உதவி செய்யுமாறும் விஜயகுமாரி கேட்டார். அதாவது அந்த வீட்டிற்கான பணத்தில் ஒரு பகுதியை இப்போது தந்து விடுகிறேன் என்றும் மீதி பணத்தை நான் நடிக்கும் படங்களில் இருந்து வரும் காசை வைத்து தருகிறேன் என்றும் கூறினார். அதற்கு கிருஷ்ணமூர்த்தியும் சம்மதித்தார். சில நாட்கள் கழித்து தேவர் பிலிம்ஸ்-ன் நிறுவனரான தேவர் விஜயகுமாரியின் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவராம்.
அதனால் தேவரிடம் பணம் வாங்கி வருமாறு தன் தந்தையிடம் சொல்லி அனுப்பினாராம். அந்த விஷயம் தேவருக்கு தெரிய வர அவருடைய தம்பியான திருமுகத்திடம் பணத்தை கொடுத்து அனுப்பி இருக்கிறார் தேவர். திருமுகத்திடமும் விஜயகுமாரி "இந்தப் பணத்தை அவர் எடுக்கும் படங்களில் நடித்துக் கொடுப்பதன் மூலம் திருப்பித் தந்து விடுகிறேன்" என்று சொல்லுமாறு விஜயகுமாரி சொல்லி அனுப்பி இருக்கிறார்.

mgr3
ஆனால் அதன் பிறகு தான் விஜயகுமாரிக்கு தேவர் எதையும் எம்ஜிஆரிடம் சொல்லாமல் செய்ய மாட்டார் என்று தெரிந்ததாம். ஏனெனில் இந்த பணத்தை கொடுத்து விஜயகுமாரிக்கு உதவ சொன்னதே எம்ஜிஆர் தானாம். இது பிற்காலத்தில் விஜயகுமாரிக்கு தெரிந்ததும் எம்ஜிஆர் இடம் போய் நன்றி கூறினாராம் விஜயகுமாரி. ஆனால் விஜயகுமாரி சொன்னதைப் போலவே தேவர் பிலிம்ஸ் சார்பாக எடுத்த விவசாயி, தேர் திருவிழா போன்ற படங்களில் நடித்துக் கொடுத்து அந்தக் கடனை அடைத்தாராம் விஜயகுமாரி.
இதையும் படிங்க : செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்துக்கு கஸ்தூரிராஜா காரணமா?.. இது என்னடா புதுசா இருக்கு!…