Homelatest newsRajini: ரஜினி லைன் அப்பில் இணையும் கௌதம் மேனன்! லிஸ்ட் பெருசா போகுதே

Rajini: ரஜினி லைன் அப்பில் இணையும் கௌதம் மேனன்! லிஸ்ட் பெருசா போகுதே

துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் வரை நான் எந்த படங்களையும் இயக்குவது இல்லை என கௌதம் மேனன் கூறியிருக்கிறார். 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்த படம் சில பல பிரச்சனைகள் காரணமாக இன்று வரை அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அந்தப் படம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாக இப்போது முடிந்து வருவதாக கௌதம் மேனன் கூறியுள்ளார். இன்னும் கூடிய சீக்கிரம் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு விக்ரம் அந்த படத்தில் நுழைந்தார். விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் அந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த நிலையில் கௌதம் மேனன் தன்னிடம் ஒரு காதல் சம்பந்தப்பட்ட கதை இருப்பதாகவும் அந்த கதையில் நடிக்க நடிகர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் காதல் காட்சிகளில் நடிக்க முன்வருவதில்லை. அதனால் இந்த கதையில் புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அது இரண்டு பேருக்கு இடையிலான ஒரு தூய்மையான காதலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நதிகளிலே நீராடும் சூரியன் என்ற ஒரு படத்தில் கௌதம் மேனனும் சிம்புவும் இணைய திட்டமிட்டு இருந்தார்கள்.

ஆனால் அந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகள் இல்லாததால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு தான் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் உருவானது என்று கௌதமேனன் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல ரஜினியிடமும் கௌதம் மேனன் ஒரு கதை சொல்லி இருந்தாராம். அந்த கதை ரஜினிக்கும் மிகவும் பிடித்திருந்திருக்கிறது. ஆனால் அது படமாகவில்லை. அப்போது கலைப்புலி தாணு கபாலி திரைப்படம் முடிந்த பிறகு கண்டிப்பாக ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணலாம் என கௌதம் மேனனிடம் கூறியிருந்தாராம்.

ஒருவேளை இது ரஜினியின் எதிர்கால திட்டமாக கூட இருக்கலாம். ஏற்கனவே ரஜினியை வைத்து நெல்சன் இப்போது ஜெயிலர் 2திரைப்படத்தை எடுத்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கு பிறகு ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

அந்தப் படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். இப்படி ரஜினியின் லைன் அப்பில் பெரிய லிஸ்ட் சேர்ந்து கொண்டே இருக்க இப்போது கெளதம் மேனன் சொன்ன இந்த ஒரு விஷயமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதனால் தாணு தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments