கங்குவா படத்தில் திமிறிய சூர்யா! இந்த வாய்ஸுக்கு சொந்தக்காரர் இவரா? வெளியான கிளிம்ஸால் பரபரப்பு
தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுபவர் நடிகர் சூர்யா. சூர்யாவின் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் கங்குவா. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிப்பில் தயாராகி வரும் இந்த படம் கிட்டத்தட்ட 12 மொழிகளில் உருவாக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக தயாராகிக் கொண்டு வரும் இந்த காங்குவா திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக சூர்யா தன்னை முழு மூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்த படத்தின் கெட்டப்பிற்காக வெளியில் வராமல் இருந்த சூர்யா இப்பொழுதுதான் அவ்வப்போது வந்து கொண்டு இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு கூட அவர் நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவிற்கு கூட வந்திருந்தார் சூர்யா. இந்த நிலையில் இந்த கங்குவா திரைப்படத்தின் glimpse வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலானது.
இதையும் படிங்க :பட்டது போதும் பயந்து ஓடி வந்த சந்தானம்! பழைய பார்முக்கு திரும்பியும் கெத்த விட்டுக் கொடுக்காத சம்பவம்
ஹாலிவுட் தரத்தில் அமைந்த இந்த வீடியோவை உலகம் எங்கிலும் இருந்த ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். இதில் கடைசியாக சூர்யா பெரும் சத்தத்துடன் கத்துகிற மாதிரி காட்சி அமைந்திருக்கும். அதற்காக வாய்ஸ் கொடுத்தது பிரபல பாடகர் அருண் ராஜா காமராஜா.
முதலில் அந்த குரலுக்கு பின்னணி குரல் நடிகர் கருணாஸ் வைத்து கொடுக்க வைக்க வேண்டும் என எண்ணினார்களாம். ஆனால் பாடலாசிரியர் மதன் கார்க்கி தான் இந்த குரலுக்கு அருண் ராஜா சரியாக இருப்பார் என சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சூர்யா முதலில் கமலை பின்னணி குரல் கொடுக்க வைக்கலாம் என நினைத்தாராம்.
ஆனால் கமல் அமெரிக்காவில் இருந்ததனால் அவருடன் சரியாக தொடர்பு கொள்ளாமல் போனதால்தான் சூர்யாவின் பிறந்தநாள் அன்று இந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்ற அவசரத்தில் படக்குழு இருந்ததால் அருண் ராஜாவை வைத்தே இதற்கு குரல் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க :‘விடாமுயற்சி’க்கு குட்பை! புது முயற்சியை கையில் எடுத்திருக்கும் அஜித் – அட இதுகூட நல்லா இருக்கே