நீங்க பேசுனா நான் வாசிக்க மாட்டேன்! கலைஞரையே எதிர்த்த பிரபலம் - ஜெமினி வீட்டில் நடந்த உச்சக்கட்டம்

Kalaignar Karunanithi: அரசியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் தன் ஆதிக்கத்தை பதித்தவர் கருணாநிதி. பல வீரமிகு வசனங்கள் இவரின் கைவண்ணத்தில் உதித்தவைதான். காலங்காலமாக நின்று பேசும் படமாக பராசக்தி படம் அமைந்தது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பதே கலைஞரே.

சிவாஜியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்த படமாகவும் அமைந்தது. அப்பேற்பட்ட வீர் வசனங்களை கொடுத்து சிவாஜி என்ற நடிகரை வெளிப்படுத்தியதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அப்பேற்பட்ட கலைஞரின் பேச்சு தனக்கு இடையூறாக இருக்கிறது. அதனால் நான் வாசிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார் ஒரு பிரபலம்.

இதையும் படிங்க: கையில கத்தி!.. மனசுல கெட்ட புத்தி.. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுங்க கமல்.. கொதிக்கும் ரசிகர்கள்!..

சிவாஜியை நாதஸ்வர வித்துவானாக காட்டிய படம் தில்லானா மோகனாம்பாள். அந்தப் படத்தில் சிக்கல் சண்முகமாக நடித்திருப்பார் சிவாஜி. ஒவ்வொரு முறையும் சிவாஜி நாதஸ்வரத்தை எடுத்து வாசிக்கும் போது அருகில் பட்டாசு வெடிசத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

இது சிவாஜிக்கு இடையூறாக இருக்கும். இதே மாதிரியான சம்பவம் உண்மையிலேயே நடந்திருக்கிறது. நடிகர் ஜெமினி கணேசனின் புதுமனை புகுவிழாவிற்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டார்களாம். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரும் கலந்து கொண்டார்களாம்.

இதையும் படிங்க: பள்ளி பருவத்திலேயே ஏற்பட்ட அந்த ஆசை… ஏடாகூடமான ஆளுதான் போலயே பாம்புபுத்து அணுமோகன்…

மகாலிங்கம் இசை கச்சேரியை தொடர்ந்து வீணை வித்துவான் எஸ்.பாலசந்தரின் கச்சேரியும் நடந்து கொண்டிருந்ததாம். ஒரு பக்கம் எஸ்.பாலசந்தர் வீணை வாசித்துக் கொண்டிருக்க முன்னிருக்கையில் அமர்ந்து அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பேசிக் கொண்டே இருந்தார்களாம்.

உடனே எஸ்.பாலசந்தர் தான் வாசிப்பதை நிறுத்திக் கொண்டு கலைஞரிடம் ‘ நீங்கள் பேசிவிட்டு சொல்லுங்கள். அப்புறம் நான் வாசிக்க தொடங்குகிறேன்’ என சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். அங்கு ஒரே மயான அமைதியாகிவிட்டது.

இதையும் படிங்க: எனக்கு இன்ஸ்பிரேஷனே இந்த நடிகர்தான்! ஒரே ஒரு பிட்ட போட்டு கோடி ரசிகர்களை கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

பெரிய பிரச்சினையாகி விடுமே என ஜெமினியும் ஓடி வந்திருக்கிறார். ஆனால் கலைஞரோ பாலசந்தரை பார்த்து ‘ நாங்கள் பேசுவது உங்களுக்கு தொந்தரவாக இருந்திருந்தால் அதற்காக நான் வருத்தம் கொள்கிறேன். நீங்கள் வாசிப்பதை தொடங்குங்கள். நாங்கள் பேசுவதை நிறுத்திக் கொள்கிறோம்’ என கூறினாராம். கலைக்கும் கலைஞனுக்கும் எந்தளவுக்கு மரியாதை கொடுத்திருக்கிறார் கலைஞர் என்பதையே இது உணர்த்துகிறது என சித்ரா லட்சுமணன் இந்த பதிவை கூறினார்.

 

Related Articles

Next Story