Categories: latest news

நீங்க எதிர்பார்க்குறது கண்டிப்பா இருக்காது! விஜய்க்கு அதுதான் ஹைப்பே.. அது இல்லாட்டி எப்படி?

Actor Vijay: இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ரஜினிக்கு இணையான ஒரு அந்தஸ்தை உடைய நடிகராக இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடிபெயர்ந்த நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய். இதில் அரசியலிலும் தனது அடுத்த பயணத்தை தொடர இருப்பதால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தன் பக்கம் இழுக்க விஜய் சில அரசியல் சார்ந்த செயல்களையும் செய்து கொண்டு வருகிறார்.

தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக அவருடைய 69 ஆவது படத்திலும் நடித்து முடித்துவிட்டு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்குகிறார் விஜய். இந்த நிலையில் கோட் படத்தை பற்றிய ஒரு தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் பரத் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: மாமியாரு முன்னாடியே அந்த மாதிரி சீன்ல நடிச்ச நிழல்கள் ரவி… ‘ஐயையோ… அவங்க என்ன நினைச்சிருப்பாங்க’..?!

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே கதையையும் தாண்டி அவருக்கு ஏற்ற வகையில் பாடல்கள் அமைந்திருக்கிறதா என்று தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். விஜய் படத்தில் ஒரு பாடல் கண்டிப்பாக சொந்த குரலில் விஜய் பாடி இருப்பார். அது மட்டுமல்லாமல் அவருடைய நடனத்திற்கு என ஒரு பாடல் கண்டிப்பாக இருக்கும்.

அதுவும் ஒரு பெரிய குத்து பாடலாகவே அமைந்திருக்கும். ஆனால் கோட்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை என்பதால் அதை நாம் எதிர்பார்க்க முடியுமா என்றால் அது இருக்காது என பத்திரிக்கையாளர் பரத் கூறியிருக்கிறார். ஆனால் வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பல நல்ல ஹிட் பாடல்கள் வந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜா அஜித் சூர்யா கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களுக்கும் பல சூப்பர் ஹிட் பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ப்ரேக் அப் ஆகி முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள ஸ்ருதியின் அடுத்த அட்ராசிட்டி! வைரலாகும் வீடியோ

ஆனால் விஜய் படம் என்று மட்டும் வரும்போது ரசிகர்கள் மனதில் ஒரு பயம் இருக்கவே செய்கிறது. அதற்கு காரணம் இதற்கும் முன்பு விஜயின் படங்களுக்கு இசையமைத்த அனிருத் தமன் போன்ற இசை அமைப்பாளர்கள் செய்த சேட்டை தான் காரணம் என பரத் கூறியிருக்கிறார். அனிருத் விஜய் காம்போவில் விஜயின் நின்றாலே ஒரு பிஜிஎம் .திரையில் தோன்றினாலே ஒரு பிஜிஎம் என ஓடிக்கொண்டே இசையை போட்டாரோ என்னவோ தெரியவில்லை.

அந்த அளவுக்கு மக்களின் ஆர்வத்தை தூண்டி விட்டிருக்கிறார் அனிருத். அதேபோல தான் தமன். இதற்கிடையில் யுவன் புதியதாக கூட்டணி எனும் போது மெலோடிக்கு சொந்தக்காரர் யுவன் என்றே தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். அதே சமயம் விஜயின் குரலில் பல சூப்பர் ஹிட் மெலோடி பாடல்களையும் நாம் கேட்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: எம்ஆர்.ராதா துப்பாக்கி வாங்கினதே எம்ஜிஆரை சுட இல்லை… அந்த டார்கட்டே வேறயாம்…! ராதாரவி சொன்ன ரகசியம்

அதனால் பூவே உனக்காக படத்தில் தொடங்கி துப்பாக்கி படம் வரைக்கும் விஜயின் குரலில் சூப்பர் ஹிட் மெலோடி பாடல்கள் வந்திருக்கின்றன. அந்த ஒரு டெம்ப்ளேட்டில் யுவன் சங்கர் ராஜா திரும்பவும் நம்மை கொண்டு போவாரா என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த படத்தில் பாடல்கள் அதிரடியாக இருக்காது. சிம்பொனி கலந்த இசையாக தான் இருக்கும். விஜய்க்கு உண்டான பாடல்கள் கண்டிப்பாக இருக்காது என பத்திரிகையாளர் பரத் கூறியிருக்கிறார்.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago