‘தசாவதாரம்’ சாதனையை முறியடித்த ‘இந்தியன் 2’ - கமலுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா?!..

Indian 2: இன்று மாலை இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. ஆனால் காலையிலேயே பத்திரிக்கை நண்பர்களுக்கு இந்தியன் 2 படத்தின் டிரைலரை பட குழு போட்டு காண்பித்து அவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. இதைப்பற்றி சில பத்திரிக்கையாளர்கள் கூறுகையில் ‘இந்தியன் 2 படத்தின் சிங்கிள்ஸ் மற்றும் சில போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை குறைத்து இருந்தது. இந்தியன் படம் மாதிரி இந்தியன் 2 திரைப்படம் இருக்காது போல என்ற ஒரு எண்ணத்தை வரவழைத்திருந்தது.

ஆனால் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது அந்த எண்ணத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி உள்ளது. இந்த ட்ரெய்லர் அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக வந்திருக்கிறது ’என எனக் கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சங்கர் இந்தியன்2 படத்தை பெரிய அளவில் எடுத்திருக்கிறார் என்பது இந்த ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது என ட்ரைலரை பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் பல பேர் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ‘மகாராஜா’ படத்தால் இம்பிரஸ் ஆன சிவகார்த்திகேயன்! பட இயக்குனருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதற்கு முன் கமல் ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில் தான் அதிக கெட்டப் போட்டு நடித்தராம். அதன் பிறகு தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்திருப்பார். இரண்டு படங்களையும் ஓவர் டேக் செய்து இந்தியன் 2 படத்தில் மொத்தம் 12 கெட்டப்பில் வருகிறாராம் கமல் .அதுவும் இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப் மற்றும் இந்தியன் 3 படத்தில் 5 கெட்டப் என வித விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருக்கிறாராம் கமல்.

கெட்டப் என்று சொன்னாலே அது கமல் என கோலிவுட்டில் அவருக்கு என ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசமான கெட்டப்புடன் தான் வந்து நடித்திருக்கிறார். அதே மாதிரி இந்தியன் 2 படத்தில் இத்தனை கெட்டப்புகளில் கமல் வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. டிரெய்லரை பார்த்த பிறகு தான் அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்ததாம். ட்ரைலரே இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி வந்து என்ன செஞ்சாங்க? விஜய் அரசியலில் இருக்கும் பவரே வேற.. பொங்கிய ஷியாம்

 

Related Articles

Next Story