More
Categories: Cinema News latest news

உலகநாயகனு சொல்லிட்டு உள்ளூர் நாயகன் சம்பளத்தை கூட கொடுக்கலடா – ‘இந்தியன்2’வில் பரிதாப நிலையில் கமல்

தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் இருந்தே முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல். தற்போது இளம் தலைமுறை நடிகர்களோடு போட்டி போட்டுக் கொண்டு வருகிறார். இவர் மட்டுமில்லாமல் கமலுடன் ரஜினியும் சேர்ந்து தாங்கள் யார் என்பதை தன் படங்களின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் விக்ரமின் இமாலய வெற்றி கமலை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. இன்னொரு பக்கம் ரஜினிக்கு ஜெய்லர் படம் ஒரு மாஸ் ஹிட்டை பதிவு செய்தது. இதனால் இவர்களின் சம்பளம் அதிகளவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க : இனிமே சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு இடமே இல்ல – போட்டியை டிராவில் முடித்த ரஜினி!

ஆனால் இந்தியன் 2வில் கமலுக்காக பேசப்பட்ட சம்பளம் வெறும் 30 கோடியாம். இது இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த நிலவரம். 2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தை பற்றி பேச்சுவார்த்தை எழுந்து 2019 ஆம் ஆண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது. அப்போது பேசப்பட்ட சம்பளம்தான் 30 கோடியாம்.

அதன் பிறகு பல முறை இந்தியன் 2 படப்பிடிப்பு நின்று போனது. விக்ரம் படத்தின் வெற்றியால் தான் மறுபடியும் இந்தியன் 2 படத்தை முழு மூச்சாக்க முடிக்க திட்டமிட்டனர். விக்ரம் படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பிலேயே எடுத்ததால் அந்தப் படத்திற்கான சம்பளமாக 150 கோடியை அவரே முடிவு செய்து என்னுடைய சம்பளம் இது என அறிவித்தார்.

அடுத்ததாக பிரபாஸுடன் ப்ராஜக்ட் – கே என்ற படத்திலும் கமல் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார். அந்தப் படத்திற்காக 20 நாள்கள்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் கமல். ஆனால் அதற்கும் கமலுக்கு பேசப்பட்ட சம்பளம் 150 கோடியாம்.

இதையும் படிங்க : இனி சிங்கப்பாதை தான்… சூப்பர்ஸ்டார் டைட்டிலே வேணாம்.. இதை செய்தால் விஜய் தான் இனி எதிர்காலம்!

அதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்திற்காக எப்படி 30 கோடியை வாங்குவார் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பெரும் பொருட் செலவில் படம் எடுக்கப்பட தனக்கு மட்டும் 30 கோடி சம்பளம் என்றால் கமல் சம்மதிக்கவே மாட்டார் என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும் ஒரு சொற்ப தொகை கமல் கணக்கில் வந்து விழும் என்று சொல்லப்படுகிறது.

Published by
Rohini

Recent Posts