இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த அநியாயம்! பிக்பாஸில் அறிவுரை சொல்லும் கமல் இப்போ எங்க?
Idian 2: கமல் நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 4 வருடங்களாக நடக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு வைசாக்கில் நடந்து வருகிறது.
படக்குழுவே எதிர்பார்க்காத வகையில் படம் மூன்று பாகமாக வந்திருப்பதாக சில தகவல்கள் வெளியானது. படத்தின் நீளம் கருதி படத்தை மூன்று பாகமாக எடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தது. அந்த வகையில் இந்தியன் 3 படம் தயாராக இருக்கும் நிலையில் இரண்டாம் பாகத்திற்கு மட்டும் சில காட்சிகள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க: ஆளவந்தான் படத்தில் அப்பவே அட்வான்ஸ் டெக்னாலஜியா? அப்படின்னா ஏன் படம் ஓடல?
அதனாலேயே இன்னும் கொ்ஞ்சம் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியன் 2படத்தில் ஒளிப்பதிவாளராக இருப்பவர் ரவி வர்மன். அவர் தன்னுடைய உதவியாளர்களை வைத்து சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது உதவியாளர்களில் ஒரு சில பேர் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்ததாகவும் அதனை பார்த்து கோபமடைந்த ரவிவர்மன் அவர்களை அழைத்து கிரேன் தூக்க உதவியாக இருக்கும் வெயிட்டை அவர்கள் கையில் கொடுத்து சிறிது நேரம் நிற்க சொன்னதாகவும் சில செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா என்ன ஒரு ஞாபகசக்தி!.. அண்ணாவையே அசர வைத்த சிவாஜி!..
அந்த வெயிட்டின் ஒவ்வொரு எடையும் கிட்டத்தட்ட 18 கிலோ வரை இருக்குமாம். சும்மா இருந்ததனால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் நோக்கத்தில் ரவி வர்மா இப்படி செய்தது மனித உரிமை விதி மீறலை தூண்டும் செயலாக இருக்கும் என்பதால் ஷங்கர் உடனே வந்து அந்த வெயிட்டை கீழே போட சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் கோபம் தணியாத ரவிவர்மா அந்த உதவியாளர்களை உடனே படத்தில் இருந்தே நீக்கி விட்டதாகவும் தெரிகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த இப்படி ஒரு சம்பவம் திரையுலகினரை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இதையும் படிங்க: கூட்டணி போட்ட பாக்கியா – ராதிகா.. என்னங்கடா நடக்குது இங்க? ஷாக்கில் ஈஸ்வரி- கோபி..!