More
Categories: Cinema News latest news

சினிமா வரலாற்றிலேயே எடுக்காத ஒரு ஷார்ட்! அதுவும் இந்த நடிகருக்கா? ‘இறைவன்’ பற்றி ஜெயம் ரவி சொன்ன சீக்ரெட்

Iraivan Movie: தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபகாலமாக இவரின் படங்கள் பெருமளவு வரவேற்பை பெறாவிட்டாலும் பொன்னியின் செல்வன் படம் இவருக்கு ஒரு சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. பொன்னியின் செல்வனாக அருள்மொழிவர்மனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அந்தப் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘இறைவன்’. என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமதுதான் இந்த இறைவன் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: யாரடி நீ மோகினி படத்திற்கு ஓகே சொல்ல இவர் தான் காரணம்… அம்மாவிடம் கண்ணீர் விட்ட ரகுவரன்…

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நயன் மற்றும் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது படமாக இந்த இறைவன் திரைப்படம் அமைகிறது. ஏற்கனவே தனி ஒருவன்1 , தனி ஒருவன்2 போன்ற படங்களிலும் நயன்தான் ஜோடி.

இறைவன் திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக ஜெயம் ரவியும் படத்தின் இயக்குனரும் பல பேட்டிகளில் தங்களது படத்தை பற்றியும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கர்ணனுக்கு சிவாஜி என்றால் ராமருக்கு இவர்தான்! இன்றுவரை எல்லா வீடுகளிலும் தெய்வமாக பூஜிக்கப்படும் நடிகர்

இந்தப் படத்திலும் ஜெயம் ரவி போலிஸாகத்தான் நடிக்கிறார். தனி ஒருவன், போகன், மிருதன், அடங்கமறு போன்ற படங்களிலும் போலீஸாகத்தான் நடித்திருப்பார். ஆனால் இறைவன் படத்தில் ஒரு சைக்கோ போலீஸாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஜெயம்ரவி.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சார்லியும் நடித்திருக்கிறாராம். சார்லியை பற்றி பேசும் போது ஜெயம் ரவி ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியிருக்கிறார். அதாவது சார்லி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் போது இயக்குனர் சார்லிக்கு மேல் இருந்து ஒரு ஷார்ட் வைத்தாராம்.

இதையும் படிங்க: ஹிட்டடித்த ஐ நோ டயலாக்…! ஓவர் இம்சை செய்த ரகுவரன்… காண்டாகிய கே.எஸ்.ரவிக்குமார்… சூப்பர் பின்னணி!

அந்த ஷார்ட்டை இதுவரை எந்த சினிமாவிலேயும் பார்த்ததில்லை என்றும் இதுதான் முதல் தடவை என்றும் கூறினார். 1000 பக்கங்களில் இருக்கும் கதையை சொல்ல வருவதை அந்த ஒரே ஷார்ட்டில் காட்டியிருப்பார் இயக்குனர் என்றும் படம் ரிலீஸாகும் போது உங்களுக்கு தெரியும் என்றும் ஜெயம் ரவி  கூறினார்.

Published by
Rohini

Recent Posts