கமல் நடிச்சிருக்கனும்.. பாடல் ஹிட்டாகி படம் ஓடாததற்கு இதான் காரணமா? என்ன படம் தெரியுமா?

Published on: December 6, 2024
kamal 1
---Advertisement---

சில படங்களை பார்க்கும் போது ச்ச.. இந்தப் படத்துல அந்த நடிகர் நடிச்சிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றும். சில படங்களை பார்க்கும் போது நல்ல வேளை அவர் நடிக்கலைனு நினைக்க தோன்றும். சில படங்களில் பாடல்கள் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி படம் தோல்வியை சந்தித்திருக்கும். அப்படி ஒரு படத்தை பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காதல் ஓவியம்’. இந்தப் படத்தில் புது முக நடிகராக கண்ணன் நடிக்க அவருக்கு ஜோடியாக ராதா நடித்திருப்பார். படத்திற்கு இசை இளையராஜா. கதைப்படி சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கண்ணன் ஒர் அனாதை. ஒரு விபத்துக்கு பிறகு அவருடைய கண் குருடாகி விடுகிறது. கோயிலில் பிறந்து சிலைக்கு பக்தி பாடல்களை பாடுவார்.

இதையும் படிங்க:வீட்டுல விசேஷமுங்கோ!.. கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான செய்தி சொன்ன விஜே மணிமேகலை..!

அவர் பாடலில் மயங்கிய ராதா அவர் மீது காதல் கொள்கிறார். வழக்கம் போல எல்லா படங்களிலும் உள்ளதை போல் இவர்கள் காதலுக்கும் எதிர்ப்பு வருகிறது. கண்ணன் குருடன் என்பதால் ராதாவை பார்க்க துடிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜனகராஜை திருமணம் செய்து கொள்கிறார் ராதா. கண்ணனுக்கு அறுவை சிகிச்சை நடந்து மீண்டும் தன் பார்வையை பெறுகிறார்.அந்த நேரத்தில் கண்ணன் ஒரு பிரபல பாடகராக மாறுகிறார்.

Kadhal-Oviyam
Kadhal-Oviyam

ஜனகராஜ் ஒரு கோயில் தர்மகர்த்தா என்பதால் அந்த கோயிலுக்கு கண்ணனை பாட வரவழைக்கிறார். எப்போதுமே ராதாவை நினைத்தே பாடும் கண்ணன் அந்த கோயிலிலும் அவரை நினைத்தே பாடுகிறார். ராதா கண்ணனை பார்த்ததும் ஷாக் ஆகிறார். அதன் பிறகு இருவரின் காதல் ஜனகராஜுக்கு தெரியவர கதை எப்படி போகிறது என்பது தான் மீதி கதை.

இதையும் படிங்க: சூரியுடன் இணையும் பொன்னியின் செல்வன் பட நடிகை!.. அட இவங்களா?.. கொஞ்சம் உஷாரா இருங்க..

ஆனால் படம் ஓடவில்லை. பாடல்கள் அனைத்துன் இன்று வரை அனைவரின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் பாடலாகத்தான் இருக்கின்றன. ஏன் படம் ஓடவில்லை என்பதற்கான காரணத்தை சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பிறகு ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறினார் ராதா. அப்படி இருக்கும் ராதாவை ஒரு புது முக நடிகருக்கு ஜோடி என்றால் ரசிகர்கள் சம்மதிப்பார்களா? அதுவும் ஒரு குருடன்.

அந்த குருடன் கமலாக இருந்திருந்தால் கண்டிப்பாக படம் ஓடியிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ராதா மீது ரசிகர்களுக்கு இருந்த ஓவர் கிரேஷ்தான் காரணம் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.