இப்ப இருக்க நடிகர்களுக்கு ஒன்னுமே தெரியாது… விஜயகாந்தை கேட்டால் அக்குவேறு ஆணிவேறு என புட்டு வைப்பார்!..
தமிழ் சினிமாவில் தற்போதைய காலத்தில் இருக்கும் நடிகர்கள் எப்போதுமே விஜயகாந்த் லெவலுக்கு வர முடியாது என்ற வரிக்களுக்கு தினமும் ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாகவே வந்து கொண்டு இருக்கிறது. இதை கேட்கும் போது இப்படியும் ஒரு நடிகரை எப்படி திரையுலகமும், ரசிகர்களும் மிஸ் செய்து விட்டனர் என்றே யோசிக்க தோன்றுகிறது.
இதை அவ்வப்போது விஜயகாந்த் குறித்து பேட்டி கொடுக்கும் பிரபலங்களும் நிரூபிக்கும் விதமாகவே பேசி வருகின்றனர். அப்படி பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தற்போது ஒரு பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து, உங்களுக்கு அவரை கேப்டனாக தான் தெரியும். எனக்கும் மற்ற பத்திரிக்கையாளர்களுக்கும் அவர் எப்போதுமே விஜி சார் தான்.
இதையும் படிங்க: ஒரு படத்துக்கு பல சம்பளம்!.. வடிவேலு செஞ்ச அட்ராசிட்டியில் கண்ணீர்விட்ட தயாரிப்பாளர்கள்…
அவரின் சமகால நடிகர்களான சத்யராஜ், பிரபுவிற்கெல்லாம் அவர் விஜியாகவே இருந்தார். இப்போது இருக்கும் நடிகர்கள் பத்திரிக்கை மீட் வரும் போது உங்களால் தான் நாங்கள் என பஞ்ச் வசனம் எல்லாம் பேசுவார்கள். ஆனால் அவர்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு பத்திரிக்கையாளர் பெயரை கேட்டால் கூட தெரியாது. அவர் எத்தனை பிரபல பத்திரிக்கையில் இருந்து வந்தால் கூட தெரியாமல் தான் இருக்கின்றனர்.
ஆனால் விஜி சாருக்கு அவரை பேட்டி காண வரும் சின்ன மீடியாவில் இருந்து வந்த பத்திரிக்கையாளரை கூட பெர்சனலாகவே தெரிந்து வைத்து இருந்தார். அவர்களிடம் எப்போதுமே நெருக்கமாக உறவையே கொண்டு இருந்தார். தூரத்தில் இருந்து யாரும் விஜி சார் பத்திரிக்கையாளருடன் அவர் பேசுவதை பார்த்தால் என்ன ஒருமையில பேசுறாரு என நினைப்பார்கள். ஆனால் அது அவரின் பாசமாகவே நாங்கள் பார்த்தோம்.
இதையும் படிங்க: பாலசந்தரோ? பாரதிராஜாவோ இல்லங்க… கோலிவுட்டில் முதல் தேசிய விருது இயக்குனர் இவர் தான் தெரியுமா?
பத்திரிக்கையாளர் என்ற பெயரில் சில போலி ஆசாமிகள் உள்ளே நுழைந்து சில பிரபலங்களை மிரட்டியதும், காசு கேட்பதையும் அப்படி தரவில்லை என்றால் அவர்கள் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் நடந்தது. அப்படி இருக்கும் போது நல்ல பத்திரிக்கையாளர் இந்த பிரச்னைக்கு எதிராக நின்றனர்.
அவர்களுக்கு உதவியாக இருந்தது விஜயகாந்த் தான். நிறைய தயாரிப்பாளர்கள் யார் என்ன என்று தெரியாமல் வரும் பத்திரிக்கையாளர்களுக்கு காசு கொடுப்பார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து இந்த பிரச்னையை பேசி முடிவுக்கு கொண்டு வந்தார். அதுப்போல அவர் தங்கி இருந்த ரோஹினி லாட்ஜில் எப்போதுமே சமையல் நடந்து கொண்டே இருக்கும். அங்கு வரும் மக்களுக்கு அது பரிமாறப்படும். அப்படிப்பட்ட ஒருவருக்கு இப்படி நடந்திருக்கவே கூடாது. வருத்தமானதாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.