Categories: Cinema News latest news

‘லால்சலாம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான்! ஏன் மிஸ் ஆச்சுனு தெரியுமா? நடிகை சொன்ன சீக்ரெட்

Lalsalaam Movie: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் லால்சலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மாதம் லால்சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதாக படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் சென்னையையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: அத மட்டும் செஞ்சால் என்னை வாழவைத்தவர்களுக்கு செய்யும் பாவம்! எதை பற்றி கூறினார் தெரியுமா ரஜினி?

மீண்டும் எப்பொழுது  நடத்தலாம் என அறிவிப்பு வெளியாகும். இந்தப் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி காந்த் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருக்கிறார். படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றது. எந்த மாதிரியான கேமியோ ரோலாக ரஜினியின் கதாபாத்திரம் இருக்கும்  என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் லால்சலாம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது என பிரபல குணச்சித்திர நடிகை விஜி சந்திரசேகர் கூறியிருக்கிறார். ஆனால் இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. என்னை மீண்டும் அழைக்கவில்லை. அந்த வாய்ப்பும் போய்விட்டது என விஜி சந்திரசேகர் கூறினார்.

இதையும் படிங்க: பைக்கையே தொடக் கூடாதுனு சொன்னவர் ஷாலினி! இப்போது அஜித்தை அவர் விருப்பப்படி விட என்னக் காரணம் தெரியுமா?

ஆனால் விஜி சந்திரசேகர் முதன் முதலில் பாலசந்தரால் தில்லுமுல்லு படத்தில் தான் அறிமுகமானார். முதல் படமே ரஜினி – கமல் என மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் தான் ஆரம்பித்திருக்கிறார். தில்லுமுல்லு படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு லால்சலாம் படத்தில் தான் கிடைத்தது. ஆனால் அதுவும் மிஸ் ஆகிவிட்டது என விஜி சந்திரசேகர் கூறினார்.

Published by
Rohini