இளையராஜாவிற்கே டெஸ்டா?.. கடைசி நிமிடத்தில் ட்யூனை மாற்றச் சொன்ன தயாரிப்பாளர்.. நம்ம ஆளு போட்டாரு பாருங்க...
தமிழ் சினிமாவில் எதுவும் எப்பொழுது எந்த துறையிலும் உடனுக்குடனே சரியாக நடந்து விடுவதுமில்லை. கடைசி நிமிடத்தில் கூட ஹீரோ ஹீரோயின்களை மாற்றச் சொல்லி ஒரு முழு படத்தையும் எடுத்து விடுகிறார்கள். அந்த விதத்தில் ட்யூன் எல்லாம் போட்டு பாடல் பதிவு செய்யும் நேரத்தில் இந்த ட்யூன் வேண்டாம் என்று ஒரு தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்.
சத்யராஜ், ராதா நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘சின்னப்பதாஸ்’. இந்த படத்தை தயாரித்தவர் சித்ரா லட்சுமணன்.படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அந்த படத்தில் ‘வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்’ என்ற ஒரு பாடல் இப்பொழுது இருக்கும்.
இதையும் படிங்க : ஒரே நேரத்தில் எம்ஜிஆர் – சிவாஜி படங்களின் கால்ஷீட்!.. பரிதவித்த சாவித்ரி.. கன்னாபின்னானு பேசிய கவிஞர்..
ஆனால் முதலில் அந்த பாடலுக்கு வேறொரு ட்யூனில் தான் இசையமைத்திருந்தாராம் இளையராஜா. அது கேட்கவே மிகவும் நெருடலாக இருக்கிறது , வேறொரு ட்யூனை போட முடியுமா என்று சித்ரா லட்சுமணன் இளையராஜாவிடம் கேட்டிருக்கிறார். என்ன சித்ரா பாடல் பதிவு இப்பொழுது வைத்துக் கொண்டு ட்யூனை மாற்றச் சொன்னால் எப்படி என்று இளையராஜா கேட்டாராம்.
5 நிமிஷத்துல 100 ட்யூன் போடுகிறவர் நீங்கள், உங்களால் முடியாத என்று கூறிவிட்டு ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என்ற படத்தில் அமைந்த பிரபலமாகாத பாடலான நானே நானா என்ற பாடலில் உள்ள ட்யூனில் கொஞ்சம் மாற்றி போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அவர் கூறியபடியே அந்த ட்யூனில் கொஞ்சம் மெட்டை மாற்றி வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும் என்ற பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்தாராம் இளையராஜா. நிமிஷத்தில் நினைத்தப்படி ட்யூன் போட்ட இளையராஜாவை என்றென்றும் புகழ்ந்து கொண்டு இருக்கலாம்.