Cinema News
இப்பதான் தெரியுது! லியோவை டைரக்ட் பண்ணது லோகேஷும் இல்ல.. ரத்னாவும் இல்ல!. என்னப்பா சொல்றீங்க!..
Leo: விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியானது லியோ திரைப்படம். படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். தமிழ், ஆந்திரா, கேரளாவில் ஜெயிலர் முதல் நாள் வசூலை லியோ முந்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் பல நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையில் படம் பட்டையை கிளப்புகிறது. படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் கதையில் கோட்டை விட்டார் லோகேஷ் என்று புலம்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க: நடிப்பு அரக்கனை இழுத்து போட்ட தளபதி68..! ஒரு மினி கோலிவுட்டே உள்ள தான் இருக்கு போல..!
வெறுமனே மாஸ், சண்டை, ஸ்டைல் என இருந்தால் போதுமா? கதை வேண்டாமா? திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இது லோகேஷ் படம்தானா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஏற்கனவே லோகேஷுக்கும் விஜய்க்கும் பிரச்சினை. அதனால் பாதி படத்தை ரத்னகுமார்தான் இயக்கினார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. ஆனால் அப்படி எந்தவித பிரச்சினையும் இல்லை என சம்பந்தப்பட்டவர்கள் கூறினார்கள்.
இதையும் படிங்க: தீயாக பரவும் விஜய்-த்ரிஷா லிப்கிஸ் புகைப்படம்..! மோசம் போய்ட்டியேமா! கதறும் குந்தவை ரசிகர்கள்…!
ஆனால் படம் பார்த்த பிறகு தான் ஒரு வேளை பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று யோசிக்க வைக்கிறது. இதற்கிடையில் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது. ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவுதான் பணியாற்றியிருந்தார்கள்.
படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் போது விஜய் மிகவும் ஆர்வமாக செயல்பட்டாராம். அந்தளவுக்கு அன்பறிவின் ஈடுபாடு விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாம். அதனால் படமுழுக்க தன்னுடன் இருக்குமாறு விஜய் அன்பறிவிடம் கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இவர் தான் இந்த படத்தின் முதல் சாய்ஸா… சிவாஜி கணேசனையே தூக்கி சாப்பிடும் அந்த பிரபலம்..!
அதாவது சில காட்சிகளில் விஜய் ஓடும் போது கார் சேஸிங் என பரபரப்பாக இருக்கும் காட்சிகளை எல்லாம் அன்பறிவை வைத்துதான் விஜய் படமாக்கச் சொன்னாராம். இதிலிருந்தே தெரிகிறது லியோ படப்பிடிப்பை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று.