Cinema News
‘லியோ’வில் விஜய் தூக்கிவைத்திருந்த குழந்தை இந்த நடிகையின் மகனா? தோழியை மறக்காத தளபதி
Leo Vijay: விஜயின் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது லியோ திரைப்படம். லோகேஷ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான படம்தான் லியோ. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இருவரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படம் விறுவிறுப்பாக போன நிலையில் ஆங்காங்கே லாஜிக் இடிப்பதாகவே ரசிகர்கள் உணர்ந்தனர்.
இதையும் படிங்க: வயசு பசங்க பாக்கக் கூடாது!.. மிச்சம் வைக்காம மொத்த அழகையும் காட்டும் தர்ஷா குப்தா..
விக்ரம் பட அளவுக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். படத்தின் கதைப்படி பார்த்திபனாக காஷ்மீரில் தன் அழகான குடும்பத்தோடு அமைதியாக வாழ்க்கை நடத்தி வரும் விஜய்தான் லியோ என ஒரு கட்டத்தில் லியோ கும்பல் பார்த்திபன் விஜயை தேடி காஷ்மீர் வரைக்கும் வருகிறார்கள்.
அதிலிருந்து நீதான் லியோ லியோ என விஜயை விரட்டிக் கொண்டே வருகிறார்கள். ஒரு நேரத்தில் தன்னுடைய எல்லா ஸ்கூல் சர்டிஃபிக்கேட் மற்றும் சிறுவயது புகைப்படங்கள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அர்ஜூனிடம் காட்டி நிரூபிக்க வருகிறார்.
இதையும் படிங்க: அஜித் சொல்லித்தான் அந்த படத்தில் நடித்தேன்!.. பல வருடங்கள் கழித்து ரகசியம் சொன்ன ஜெய்!…
அதில் தன்னுடைய மகன் சிறுவயதில் இருக்கும் போது அவனை தூக்கி வைத்திருக்கிற மாதிரி விஜய் ஒர் புகைப்படத்தை காட்டுவார். அந்த புகைப்படத்தில் விஜய் தூக்கி வைத்திருக்கும் குழந்தை என் மகன் தான் என நேற்று வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதன் மூலம் என் மகனும் லியோவில் கனெக்ட் ஆகிவிட்டான் என கூறி தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பகாலங்களில் விஜய்க்கு ஒரு நல்ல தோழியாக வனிதா விஜயகுமார் இருந்திருக்கிறார். இதை ஒரு பேட்டியில் வனிதாவே கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்க இந்த மாதிரி நடிக்கலாமா?!.. அறிவுரை சொன்ன பெண்மணி!.. மன்னிப்பு கேட்ட ரஜினி!…
வனிதா வீட்டிற்கு அவ்வப்போது விஜய் சென்று வருவது வழக்கமாம். அப்படி ஒரு நேரத்தில் செல்லும் போதுதான் வனிதாவின் மகனை தூக்கினாராம். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது என சொல்லப்படுகிறது. அதை அப்படியே லியோவில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.