யூட்யூப் பிரபலத்தினை எல்ஐசி படத்தில் இறக்கிய விக்னேஷ் சிவன்!... வெளியான வைரல் வீடியோ

by Akhilan |
யூட்யூப் பிரபலத்தினை எல்ஐசி படத்தில் இறக்கிய விக்னேஷ் சிவன்!... வெளியான வைரல் வீடியோ
X

Vignesh Shivan: அஜித்துடனான வாய்ப்பு மிஸ்ஸானதால் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தினை இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஒரு யூட்யூப் பிரபலத்தினை இறக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக எண்ட்ரி ஆனவர். அப்படம் கொடுத்த வரவேற்பு ஓகேவாக தான் இருந்தாலும் பெரிய ரீச் கிடைக்கவில்லை. இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடித்தான் படத்தினை இயக்கினார்.

இதையும் படிங்க: அதிக பாடகர்கள் பாடிய ஒரே படம்! நம்ம கேப்டன் படம்தான்.. என்ன படம்னு நீங்களே பாருங்க

அப்படம் விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்குமே வாழ்க்கையே மாற்றியது. அப்படத்தில் நயனுடன் காதல் உண்டாகி கல்யாணமும் செய்து கொண்டார். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. அடுத்த அஜித் படத்தினை இயக்க இருந்தார்.

ஆனால் அந்த வாய்ப்பு மிஸ்ஸாக லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் கோயமுத்தூரில் துவங்கப்பட்டது. அப்படத்தில் ஒரு யூட்யூப் பிரபலத்தினை விக்னேஷ் இறக்கி இருக்கிறார்.

சென்னையிலே எங்கும் இல்லாத விலையில் பர்னிச்சர். பிடிச்சிருப்பீங்களே அவரே தான். நிஃயா பர்னிச்சர் வைரல் சிறுவனான முகமது ரசூல் தான் இந்த படத்தில் நடிக்க வைத்து இருக்கிறார். அவர் பேசும் ஒரு வீடியோவை ரவுடி பிக்சர்ஸ் புது பப்ளிசிட்டி மேனேஜர் என ட்வீட் செய்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் ஆசை தான் போல!… இடத்துக்காக எதுவும் கேட்கவில்லை பிரேமா!… கலங்கிய தியாகு

அந்த வீடியோவைக் காண: https://twitter.com/Rowdy_Pictures/status/1753652456381378717
Next Story