Actor Vijay: எங்களுக்கு அவர்தான் ஹீரோ! ராணுவ அகாடமியில் விஜய்க்காக வீரர்கள் செய்த சம்பவம்

by Rohini |
vijay1
X

vijay1

Actor Vijay: அனைத்து தரப்பினரும் விரும்பும் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார் விஜய். தற்போது விஜய் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு கடைசி படமாகும். இந்தப் படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். கடைசி படம் என்பதால் ரசிகர்களை நல்ல முறையில் சென்றடைய வேண்டும் என விஜய் உட்பட படக்குழு அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில்தான் விஜய் அவருடைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். வருகிற 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலை மிகவும் தைரியமாக எதிர்கொள்ள இருக்கிறார் விஜய். அதற்கான வேலைகள்தான் இப்போது தடபுடலாக நடந்து வருகின்றது. தனது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வைத்து அரசியல் சார்ந்த கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: SK: தனுஷ விடுங்க நம்ம சிவகார்த்திகேயனை பாருங்க!… கைவசம் இத்தனை படங்களை வச்சிருக்காரா?!…

இந்த நிலையில் விஜய் நேற்று சென்னை ராணுவ அகாடமிக்கு சென்ற வீடியோ வைரலானது. தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தற்போது ராணுவ அகாடமியில் நடந்து வருகிறது. அதற்காக விஜய் அங்கு செல்ல அங்கு இருந்த சில ராணுவ வீரர்கள் விஜயிடம் தங்களுடைய குடும்பம் உங்களை சந்திக்க ஆசைப்படுகிறார்கள் என்ற வேண்டுகோளை வைத்திருக்கின்றனர்.

vijay

vijay

அதற்காக சில ஏற்பாடுகளை செய்து முக்கியமான ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மட்டும் விஜயை சந்தித்திருக்கின்றனர். அப்போது விஜய்க்கு ராணுவ வீரர்களின் சார்பாக கௌரவமும் வழங்கப்பட்டன. எல்லாம் முடிந்து விஜய் இறங்கி வரும் போது அங்கு கூடியிருந்த சில ராணுவ வீரர்கள் சிலர் விஜயுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயற்சி செய்தனர். என்னதான் உண்மையான ஹீரோ நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் என்று சொன்னாலும் அவர்களை பொறுத்தவரைக்கும் எங்கள் ஹீரோ விஜய் என்று நேற்றைய நிகழ்வில் காட்டிவிட்டார்கள்.

இதையும் படிங்க:Sivakarthikeyan: அமரன் வெற்றி! ஜிவிக்கு ஸ்பெஷல் பரிசை வழங்கிய சிவகார்த்திகேயன்

விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய கடைசிபடமான தளபதி 69 படத்திற்கும் ஒரு வித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தளபதி 69 படத்தின் ஓவர் சீஸ் உரிமை கிட்டத்தட்ட 78 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DCIqECqS03i/?igsh=a3J2N3RuN3ZvdG03

Next Story