Cinema News
ராதிகாவால் ராதாவுக்கு கிடைக்காம போன தேசிய விருது!.. உயிர குடுத்து நடிச்சும் வீணாப்போச்சே!…
Muthal Mariyathai: இயக்குனர் சிகரம் என சும்மாவா சொன்னார்கள்? முதல் படத்தில் இருந்தே கத்தி மேல் நடக்கும் கதையாகத்தான் பாரதிராஜாவின் நகர்வு இருந்தது. யாருமே எடுத்ததும் புதுமுகங்களை போட்டு தன்னுடைய அறிமுகத்தை பதிவுசெய்ய மாட்டார்கள்.
ஆனால் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தில் புதுமுகங்களை கொண்டு நடிகர், நடிகைகளாக நடிக்க வைத்தார். ஆனாலும் அந்த தேர்வில் வெற்றியும் பெற்றார்.தான் எடுக்கும் ஒவ்வொரு படங்களின் மூலமும் தனக்கு உண்டான ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டே போனார் பாரதிராஜா.
இதையும் படிங்க: ‘லியோ’வில் விஜய் தூக்கிவைத்திருந்த குழந்தை இந்த நடிகையின் மகனா? தோழியை மறக்காத தளபதி
அவரின் படைப்பில் ஏராளமான படங்கள் வெளிவந்தாலும் மண் மனம் கமலும் படமாக வெளிவந்தது சிவாஜி நடிப்பில் உருவான முதல் மரியாதை திரைப்படம். இந்தப் படத்தில் சிவாஜியுடன் நடிகை ராதா மற்றும் வடிவுக்கரசி போன்றோரும் நடித்திருந்தார்கள்.
அதுவரைக்கும் வீர வசனத்துடனும் துடிப்பான நடிப்புடனும் பார்த்த சிவாஜியை இந்தப் படத்தின் மூலம் முற்றிலுமாக காட்டினார் பாரதிராஜா. முது வயதில் வரும் காதல் என்ற கருவை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்தார் பாரதிராஜா.
இதையும் படிங்க: வயசு பசங்க பாக்கக் கூடாது!.. மிச்சம் வைக்காம மொத்த அழகையும் காட்டும் தர்ஷா குப்தா..
இந்த வயதில் சிவாஜிக்கு காதலா என்று ஆரம்பத்தில் சில பேர் முட்டுக்கட்டை போட்டார்கள். ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் கதையின் மீது இருந்த நம்பிக்கையில் துணிச்சலோடு இறங்கி படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கினார்.
இதில் இன்னொரு கதாபாத்திரத்தை முக்கியமாக சொல்லவேண்டும். நடிகை ராதா. அந்தச் சின்ன வயதில் அதுவும் ஜாக்கெட்டே அணியாமல் தைரியமாக நடித்ததற்கே அப்பொழுது ஏகப்பட்ட பாராட்டுக்களை பெற்றார் ராதா.
இதையும் படிங்க: அஜித் சொல்லித்தான் அந்த படத்தில் நடித்தேன்!.. பல வருடங்கள் கழித்து ரகசியம் சொன்ன ஜெய்!…
இந்த நிலையில் முதல் மரியாதை படத்தில் ராதாவுக்கு தேசியவிருது கிடைக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தார்களாம். அதற்கான எல்லா தகுதியும் இருந்தும் அந்தப் படத்தில் ராதாவுக்கு டப்பிங் பேசியது ராதிகா. சொந்தக் குரலில் பேசியிருந்தால் கண்டிப்பாக ராதாவுக்கு தேசியவிருது கிடைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.