More
Read more!
Categories: Cinema News latest news

சூர்யா நடிக்க இருந்த கேரக்டரா அது? நல்லவேளை விஜய் காப்பாத்திட்டாரு – என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் உருவாக்கப்படுகின்ற கதை வேறொருவருக்காக தயாரிக்கப்பட்டு ஆனால் சூட்டிங்னு வரும் போது வேறொருவர் நடித்துக் கொண்டிருப்பார். அது இன்றைய காலகட்டம்னு இல்லை. ஆரம்பகால சினிமாவில் இருந்தே இந்த நிலைமை இருந்து கொண்டுதான் வருகின்றது.

சமீபத்தில் கூட நடிகர் அப்பாஸ் ஒரு பேட்டியில் ஜீன்ஸ் மற்றும் காதலுக்கு மரியாதை படம் அவர் பண்ண வேண்டியதாம். ஆனால் சில பல கம்யூனிகேஷன் பிரச்சினையால் இந்த செய்தி அப்பாஸ் காதுக்கு செல்லவே  இல்லையாம். ஒரு வேளை நடந்திருந்தால் இன்று அப்பாஸின் ரேஞ்சே வேறு மாதிரியாக இருக்கும்.

Advertising
Advertising

இதையும் படிங்க : அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்புதான்! – ஜெயிலர் பார்த்திவிட்டு பொங்கி எழுந்த வனிதா..

அதே போல நேருக்கு நேர் படத்திலும் முதலில் நடித்தது அஜித் மற்றும் விஜய்தான். 10 நாள்கள் நடித்து கொண்டிருந்த அஜித் அவரின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா, ஆகியோர் நடிப்பில் வெளியான படம்  நண்பன். இந்தப் படத்திற்காக ஷங்கர் முதலில் முடிவு செய்தது நடிகர் சூர்யாவைத்தானாம். ஆனால் சூர்யாவால் அப்போது அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

அதன் பிறகே விஜய் நடித்தார். விஜய்  நடித்திருந்தால் மட்டுமே அந்த படம் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் சிறந்ததாக இருக்கும் என்ற வகையில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜய்.

இதையும் படிங்க : சின்னத்திரையின் நயன்தாரா பில்டப்பை சுக்கு நூறாக உடைத்த ரஜினி! வருத்தத்தில் அறந்தாங்கி நிஷா

கூடுதல் சிறப்பு என்னவென்றால் விஜயின் காமெடி சென்ஸ் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கும். ஒரு வேளை சூர்யா நடித்திருந்தால் கூட பிரெண்ட்ஸ் படம் ஓடியிருக்குமா என்பது கூட சந்தேகம் தான்.

Published by
Rohini

Recent Posts