அடேய் திருட்டு மன்னா!..கமல் , ரஜினியிடம் நல்லா வாங்கி கட்டிய அட்லீ!..விஜயகாந்த் மட்டும் என்ன சும்மா இருப்பாரா?..
தமிழில் இயக்குனராக அட்லீ அறிமுகமான படம் ராஜாராணி. அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யை ரசிகர்களிடம் மாஸான ஹீரோவாக கொண்டு போய் சேர்த்தது. இந்த படத்திற்கு பின் இயக்குனர் அட்லீ விஜய்யின் தீவிர ரசிகராக மாறினார்.
மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிகில், தெறி போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார் அட்லீ. வரிசையாக அட்லீ இயக்கத்தில் உருவான விஜய் படங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றதோ அதே அளவுக்கு
பல சர்ச்சைகளுக்கும் ஆளானது. ஆமாம். மெர்சல் , தெறி போன்ற படங்கள் பழைய படங்களின் காபி என்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.
அதை நிரூபிக்கும் வகையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவருக்கு தெரிந்த சில விஷயங்களை கூறினார். அவர் கூறுகையில் ‘மெர்சல் பட ரிலீஸ் சமயத்தில் படத்தை பார்க்க ஃபை ஸ்டார் கதிரேசன் என்பவர் சென்றிருக்கிறார். அவருக்கு படத்தை பார்த்தும் ஷாக் ஆயிட்டாராம். ஏனெனில் இந்த படம் ரஜினியின் மூன்று முகம் படத்தின் காபி என நினைத்து அதிர்ச்சியடைந்து விட்டாராம்’
ஏனெனில் மூன்று முகம் ரீமேக் உரிமையை கதிரேசன் தான் வாங்கியிருந்தாராம். அதனால் அவருக்கு தேவையான சில செட்டில்மெண்ட்லாம் செய்து அவரை அடக்கி வைத்துவிட்டனராம். இது அப்படியே கமல் காதுக்கு போக கமல் அலுவலகத்திலிருந்து அட்லீக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு வர நேராக கமலை போய் சந்திக்கிறார். ஆனால் கமல் எதுவும் சொல்லாமல் அட்லீயை பக்கத்தில் அணைத்து ஒரு புகைப்படம் மட்டும் எடுத்து அனுப்பி விட்டாராம். மறு நாள் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக அந்த புகைப்படத்தில் கமலுக்கு பின்னாடி அபூர்வ சகோதரர்கள் படத்தின் புகைப்படம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சொல்லாமலே இது அபூர்வ சகோதரர் படத்தின் காபி தான் மெர்சல் என்று கமல் கூறியிருக்கிறார்.
அதை அடுத்து தெறி படம் ரிலீஸாக இது விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் காபி மாதிரி இருக்கே என்று விஜயகாந்திடம் சொல்ல அவரும் படத்தை பார்த்தாராம். யாருப்பா அந்த அட்லீ என கேட்டுவிட்டு விஜய்க்காகவும் அவரது தந்தைக்காகவும் பிரச்சினை செய்யாமல் இருந்துவிட்டாராம்.