sakthi
Parasakthi Movie:
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன் ,அதர்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக ரவி மோகன் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
வில்லனாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். அதனால் இந்த படத்திற்கு அதுவே ஒரு ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது .இன்றைய தலைமுறை நடிகர்களில் போட்டி நடிகர்களாக இருப்பவர்களும் இவர்கள்தான். அதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் ரவி மோகன் வில்லனாகவும் நடிப்பதே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கதைக்கு தேவைப்படுவதால் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் ரவி மோகன் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். படம் பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கின்றது. ஏற்கனவே பொங்கல் வெளியீடாக விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படமும் காத்திருக்கிறது. அதனால் இந்த பொங்கல் ரசிகர்களுக்கு ஒரு விருந்து படைக்கும் பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு போன பிறகு சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி எனக் கூறிவரும் நிலையில் இப்போது விஜய்க்கே போட்டியாக களமிறங்கி விட்டார் சிவகார்த்திகேயன் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது விஜய்க்கு கடைசி படம் என்பதால் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் அதைவிட பெரிய ஸ்பெஷலாக இருக்கப் போகிறது பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அந்த விழாவிற்கு சினிமாவில் இருக்கும் பெருந்தலைகள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்ல பராசக்தி படம் சிவாஜி நடிப்பில் கலைஞர் கைவண்ணத்தில் உருவான திரைப்படம். அந்த படத்தின் தலைப்பை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். அதுவே படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. அதனால் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவாஜி கணேசனின் குடும்பத்தாரை வரவழைத்து அவர்களை மேடையில் பெருமைப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல ரஜினி கமலையும் இந்த விழாவிற்கு அழைத்து மேலும் இந்த விழாவை சிறப்பாக்க எண்ணியிருப்பதாக தெரிகிறது.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…