‘பிதாமகனில்’ புரண்டு புரண்டு சண்டை போட்ட விக்ரம் - அதுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?

by Rohini |
pitha
X

pitha

கோலிவுட்டில் ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு இந்தப் படத்திற்காக விக்ரம் தன்னையே மிகவும் வருத்தி இருக்கிறார்.

pitha1

pitha1

இந்தப் படம் மட்டும் இல்லாமல் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் நடிப்பிற்காக எதையும் செய்ய துணிந்த நடிகராக விக்ரம் திகழ்ந்து வருகிறார். பெரும்பாலும் பலவிதமான கெட்டப்புகளை போட்டுக்கொண்டு ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். அன்னியன், கோப்ரா ,பிதாமகன் போன்ற பல படங்கள் இவருடைய விதவிதமான தோற்றத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த படங்களாகும்.

இதையும் படிங்க : நடிகையின் செயலைக் கண்டு கடுப்பான தோனி – என்ன பண்ணார் தெரியுமா? தல ரொம்ப கோவக்காரரா இருக்காரே

குறிப்பாக பிதாமகன் படத்தில் ஒரு வெட்டியானாக அவர் ஏற்று இருந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரமாகும். சொல்லப்போனால் ஒரு மிருகத்தையும் மிஞ்சிய கதாபாத்திரமாக அது அமைந்திருக்கும். இதைப் பற்றி பிரபல ஸ்டண்ட் இயக்குனரான சிவா ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

pitha2

pitha2

ஸ்டண்ட் சிவா பெரும்பாலும் கொரியன் படங்கள் ஹாலிவுட் படங்கள் இவைகளை தான் தன்னுடைய ரெஃபரன்ஸாக வைத்திருப்பாராம். பெரும்பாலான சண்டை காட்சிகள் இந்த மாதிரி படங்களை பார்த்து தான் அவரே எடுப்பாராம்.

ஆனால் பிதாமகன் படத்திற்கு எந்த ஒரு படத்தையும் பார்க்க கூடாது என்ற முடிவில் இருந்தாராம் ஸ்டாண்ட் சிவா. விக்ரமின் கதாபாத்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டு டிஸ்கவரி சேனலை மட்டும் தான் ஸ்டாண்ட் சிவா பார்த்தாராம். ஏனெனில் விக்ரமின் கதாபாத்திரம் ஒரு மிருகத்தனமான கதாபாத்திரம் என்பதால் மிருகங்கள் எப்படி சண்டையிட்டு கொள்கின்றன? எப்படி வேட்டையாடுகின்றன? என்பதை ரெபரென்ஸாக எடுப்பதற்கு டிஸ்கவரி சேனலை பார்த்தாராம்.

pitha3

pitha3

கிளைமேக்ஸ் காட்சியில் கூட விக்ரம் அந்த வில்லனை அடி அடி என அடித்து விட்டு ஓடி போய் பக்கத்தில் ஒரு உரலில் இருக்கும் தண்ணியை அப்படியே குனிந்து குடிப்பார். அதன் பிறகு அந்த வில்லனை தன் மடியில் வைத்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டே கடைசியில் தான் கொல்லுவார். இது ஒரு சிறுத்தை மானை எப்படி வேட்டையாடுகிறது என்பதை பார்த்து தான் இந்த காட்சியை படமாக்கினேன் என ஸ்டாண்ட் சிவா கூறினார்.

இதையும் படிங்க : நீங்க இப்படி செய்யலாமா?!.. கடுப்பான சென்சார் போர்ட் அதிகாரி!.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நாகேஷ்…

Next Story